எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா - 23

subasini

Moderator
மனம் - 23

மலருவதும் மணப்பதும் மலரின் பண்பானால்
காய்த்துக் கனித் தருவது அதன் இயல்பு…

காதலில் சண்டையும் ஊடலும் உரிமையானால்
அணைத்துச் சமாதானம் செய்வது கடமையாகும்.

எழுதுவோம் புதிய விதி…

காலையில் வாசல் கூட்டிக் கோலம் போட வந்த புனிதா, கண்டதோ மருகனின் காரைத்தான்.

வேகமாக உள்ளே வந்து தன் கணவனை எழுப்பினார்.

"என்னங்க… எழுந்திறீங்க"..

"என்னடி.. இவ்வளவு சீக்கரம் எழுப்பி விடற.. வயதாக ஆக உனக்கு என்மேல் அக்கறை எல்லாம் கம்மி ஆகிட்டே போகுது.. என்று திரும்பிப் படுத்தார்.

"என்னங்க.. நம்ம மருமகன் கார் வெளியே நிக்குதுங்க "என்றாள் புனிதா… வேகமாக எழுந்து முகம் கழுவியபடி


"காரை நிறுத்திட்டு வருவாரா இருக்கும்… நீ போய் அவருக்குக் குடிக்கக் காபிப்போடு" என்று எழுந்தார்.

"ரொம்ப நேரமாக எழுப்பறேன், அவர் காரைத் திறக்கவே இல்லைங்க" என்றாள் புனிதா.

யோசனை ரேகை முகத்தில் வர வேகமாக முகம் துடைத்தவர் வாபோய்ப் பார்க்கலாம் என்று வெளியே வந்தார் கங்காதரன்…

அதியமானின் காரின் அருகே வந்தவர் மெல்லத் தட்டிபார்த்தார்... கார்கதவுத் திறக்கவில்லை என்றதும், எதற்கும் திறந்துப் பார்க்கலாம் என்று முயன்றவருக்குக் கதவுத் திறந்து கொண்டது.

கார்கதவை லாக் பண்ணாமல் விட்டு இருக்கார் என்று புரிந்தது.

மெல்ல ட்ரைவர் இருக்கையில் படுத்து இருக்கும் மருமகனைத் தொட்டவருக்கு அவன் மேனியின் சூடு உணர்த்தியது அவன் காய்ச்சலின் அளவை…

மருமகனை எழுப்ப முயன்றதில் மெதுவாகக் கண் திறந்தவனுக்கு அசைய முடியவில்லை…

அவனால் எழுந்திரிக்க முடியவில்லை என்பது தெரிந்ததும் “இருங்க மாப்பிள்ளை நான் உங்களுக்கு உதவுகிறேன்” என்று முழுப் பலம் தந்து அவனைக் காரில் இருந்து வெளியே வர உதவினார்.

அவர் தோளில் கையைப் போட்டுத் தன்னைக் கட்டுக்குள் கோண்டு வந்தவன் மெல்ல “நானே நடந்து வரேன் மாமா” என்று கையை விட்டதும்… நிற்க முடியாமல் தள்ளாடினான் அதியமான்.

“பரவாயில்லை மாப்பிள்ளை”.. என்று தன் தோளில் கையைப்போட்டு அதியமானை வீட்டிற்குள் அழைத்து வரவும் புனிதா, தாராவை எழுப்பியிருந்தார் வேகமாக..

தூக்கக் கலகத்தில் வந்தவள் நோக்கியது தன் தந்தையின் தோளில் கைகளைப் போட்டு மெல்ல நடந்து வரும் கணவனைத் தான்…

அப்பா… என்றழைத்தவள்… என்னாச்சுங்க என்ற அவன் அருகை வந்தவளின் கண்கள் கலங்கியது…

வீட்டில் நடந்த சத்தத்தில் எழுந்த அமரன் தந்தையைக் கண்டதும் தனது மழலையில் அப்பா… என்றழைத்துத் தத்தித் தத்தி ஒடி வந்தான் அதியமானிடம்.


"அத்தை அவனை எடுங்க... அவனுக்கும் காய்ச்சல் வந்திடபோகுது"... கூறியவனின் குரலில் இருந்த சோர்வு சொன்னது அவன் காய்சலின் அளவை…

தன் தந்தையின் அருகில் வந்தவள் வேகமாக அவன் மற்றோருக் கையை எடுத்துத் தன் மேல் போட்டவள் அவனைத் தன் படுக்கை அறைக்கு அழைத்து வந்தாள் ..

அவள் இடையோடு அணைத்த படி நடந்து வந்தவன் அவள் முகத்தை மட்டும் பார்க்கவே இல்லை.

அவனைப் படுக்க வைத்தவள்… "அப்பா பக்கத்து வீட்டு டாக்டர் ஆன்டி இருக்காங்களாபாருங்க" … என்றவள் மெல்ல அவன் சட்டையைக் கழட்டி விடப் போனவளின் கையைத் தட்டி விட்டவன், தானே தன் சட்டையைக் கழற்றினான்…

முடியவில்லைதான் ஆனால் அவளை உதவுவதற்கு அனுமதிக்கவில்லை அவன். வேறு மிருதுவான ஆடைக்கு மாறியவன் படுக்கையில் வீழிந்தான்…

இந்தச் சின்ன வேலைகூட, காய்ச்சல் வந்த உடலில் செய்தது, மலையை நகர்திய உணர்வைத் தந்தது அதியமானுக்கு.

கணவனின் செயலில் விழிகளில் உண்டான கண்ணீர்த் தாராவின் கன்னத்தைச் சுட்டது.

அவள்தான் அவனிடம் தான் கோபத்தில் சண்டைபோட்டு வந்து இருக்கிறாள்…

நியாயமாக அவள் தான் அவனிடம் கோபத்தைக் காட்ட வேண்டும். ஆனால் எல்லாம் எதிர்ப்பதமாக இருந்தது. அவளை அவன் தவிர்ப்பது கண்டு மனம் வேதனை அடைந்தாள் தாரா.

அப்போது அவங்களுக்கு இடையே இருக்கும் தனிமைத் தவிர்க்க வந்தான் டாக்டர் சித்தார்த்.

“ஹே தாரா எப்படி இருக்க, உன்னுடைய ஹஸ்பண்டுக்கு உடம்புசரியில்லை என்று அங்கிள் வந்து சொன்னாரு, என்ன ஆச்சு அவருக்கு” என்று தாராவைப் பார்த்துக் கேட்டான் சித்தார்த்.

அவனைப் பார்த்து “அம்மாவைத் தானே கூட்டிட்டு வரசொன்னேன் நீயே ஏன் வந்த” என்று கேட்டாள் தாரா.

“இல்ல அம்மாவுக்கு டூட்டி இருக்குன்னு கிளம்பிப் போயிட்டாங்க, அதனால் தான் நான் வந்தேன். ஏய் நானும் எம்பிபிஎஸ் முடிச்சிருக்கேன்பா… நானும் நல்ல டாக்டர் தான்” என்று கூறிக் கொண்டே அதியமானின் உடல் நிலையைப் பரிசோதித்தான்.

“காய்ச்சலும் சோர்வும் தான் அவருக்கு வேற ஒன்றும் இல்லை" என்றவன் "சரியாகச் சாப்பிடவில்லை போல” என்று அதியமானைப் பார்த்துக் கேட்டான்

“ஆமாம் ரெண்டு மூணு நாளாக வேலைப்பளு அதிகமாக இருந்ததால்... சரியாகச் சாப்பிடவில்லை” என்று தன் மனைவி பார்த்துக் கொண்டே பதில் உரைத்தான் அதியமான்

அப்பொழுதுதான் புரிந்தது தாராவிற்குத் தான் வந்ததிலிருந்து அவன் சரியாக உணவு மேற்கொள்ளவில்லை என்று.

தன் கோபத்தில் கணவனைச் சரியாகக் கவனிக்கவில்லை என்பதும் அவனுடைய வேலைப்பளுவும் புரிந்தது தாராவிற்கு.

எப்பொழுதும் வேலை அதிகமாக இருக்கும் நேரம் அவள் தான் அவனுக்குப் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்வாள்.

அது பழகியதால் அவனால் வேற எதுவும் செய்யத் தோன்றவுமில்லை என்பதை விட விரும்பவில்லை என்பதுதான் உண்மை.

“இந்த இன்ஜெக்ஷன் போடறேன்… நன்றாகத் தூங்குங்க… இரண்டு நாளைக்கு நல்ல சாப்பிட்டு ரெஸ்ட் எடுத்தாலே போதும், எந்தப் பிரச்சனையும் இருக்காது” என்று பரிசோதித்து அவனுக்கு இன்ஜெக்ஷனை ஒன்றைப் போட்டு மருந்தும் எழுதிக் கொடுத்தான்.

“அப்புறம் தாரா எப்படி இருக்க” என்று நண்பர்களுக்கு இடையே பேச்சுவார்த்தை நடந்தது.

“நான் நல்லா இருக்கேன் சித்து… நீ எப்படி இருக்க” என்று கேட்டவனிடம்

“நானும் நன்றாகத் தான் இருக்கேன்” என்றவன் அதியமானைப் பார்த்து

“இவளுக்காகத் தான் நான் டாக்டரே படிச்சேன்” என்று சித்தார்த் கூறினான்.

புரியாதது போல் புருவம் சுருங்கித் தாராவைப் பார்த்தான் அதியமான்.

அப்பொழுது சிரித்துக்கொண்டே “இல்லை சார் அவளைச் சின்ன வயசுல இருந்து எனக்கு ரொம்பப் பிடிக்கும், அவளுக்கு டாக்டர் என்றால் சின்ன வயசுல இருந்தே ஒரு கிரேஸ், அதனாலேயே அவளை இம்ப்ரஸ் பண்ணனும் என்பதற்காக டாக்டருக்குப் படிக்கப் போனேன். நான் படிக்கப் போறதுக்குள்ள, நீங்க அவளை இம்ப்ரஸ் பண்ணிட்டீங்கறது, நான் கவனிக்க மறந்துட்டேன்” என்று நகைச்சுவையாகவே தனக்குத் தாராவை விருப்பம் என்பதைக் கூறினான்.

பின்னர் “இப்போ எனக்கொரு ஆளும் இருக்கு… என்னுடைய டிபார்ட்மெண்ட்ல என்னுடைய ஜூனியர் தான்” என்று தனக்குக் காதலும் இருக்கிறது என்பதையும் அங்கே கூறிவிட்டு இருவரிடமும் விடைபெற்றுச் சென்றான் சித்தார்த்.

அந்த இளைஞன், தாராவைத் தன்னுடைய சைல்ட்வுட் கிரஷ் என்று கூறியதில் பொறாமை வந்தது அதியமானுக்கு.

அதில் முகம் மேலும் கோபத்தில் சிவந்தததைப் பார்த்தத் தாராவிற்கு ‘சரிதான் இன்னிக்கு எனக்கு நேரமே சரியில்லை’ என்று மனதில் நினைத்தாள் .

அதியமானுக்குக் காலையில் சாப்பிடுவதற்குச் சூடாக இட்லியும் அதற்குச் சட்னியும் செய்து தன் பேரனோடு அங்கே கொண்டு வந்தார் புனிதா..
இந்த இரண்டு நாளும் பேரனைத் தன்னுடனே வைத்துக்கொண்டு தன் குற்றவுணர்வைகுறைக்கப் பாடுப்பட்டார், தாராவின் தாயார். அவன் முகத்தில் இருக்கும் சிரிப்பின் அழகில் தன்னைப் பரிக்கொடுத்தார்... பிள்ளை மனம் கள்ளமில்லாதது என்பதை உணரவும் செய்தார் புனிதா.

“இந்தா, தாரா முதலில் இந்த இட்லியை மாப்பிள்ளைக்குச் சாப்பிடுவதற்குக் குடு” என்றவரிடம்

“அத்தை அமரனை எடுத்துட்டுப் போங்க... அவன் என்னிடமே ஒட்டிட்டுத் தான் இருப்பான்‌, அவனுக்கு அப்பறம் காய்சல் வந்திரும்” என்றவனிடம்

“நேற்றைக்கெல்லாம் உங்களை மட்டும்தான் கேட்டுட்டு இருந்தான் குட்டி” என்ற தகவலை அவனுக்குத் தந்தார்…

தன் மாமியாரின் வார்த்தைகளைக் கேட்டவன் சினத்தில் தன்னவளை முறைத்தவன்….

“ பரவாயில்லை அத்தை அவனைக்கூட்டிட்டுப் போங்கள்” என்றான் ….

“புரியுது மாப்பிள்ளை.. என்றவர் தாரா என்ன வேடிக்கைப் பார்த்துட்டு இருக்க… அவருக்குச் சாப்பிடுவதற்குக் குடு” என்றவர் பிள்ளையோடு அங்கிருந்துச் சென்றார்.

அங்கே கொண்டு வந்து வைத்திருந்த சூடான இட்லியை‌ வைத்து, சட்னியைக் கொஞ்சம் ஊற்றியவள், தட்டில் இருந்த எடுத்துக் கணவனுக்கு ஊட்டிவிட்டாள். அவளிடம் இருந்து உணவினை வாங்காமல்… அவளிடம் இருந்து தட்டை ‌வாங்கியவன் மெதுவாக உண்ண ஆரம்பித்தான்… அவனுடைய சோர்வின் காரணம் உடல் ஒத்துழைக்க மறுத்தது…

மெல்லகண் முடியவன் அப்படியே சாய்ந்தான் கட்டிலில் அமர்ந்தபடி… வேகமாக அவனிடம் இருந்து தட்டை வாங்கியவள்…
“தாங்க நான் ஊட்டி விடறேன்" என்றவளை முறைத்தான் அதியமான்.

காய்ச்சல் காரணமாக உடல் சூட்டோடு அவன் கோபத்தின் அளவும் அதிகமாகியதில் கண்கள் நன்றாகச்சிவப்பேறியது.


கணவனின் கோபத்தில் அழுகை வந்தது தாராவிற்கு…
தன் உதட்டைக் கடித்து அழுகையைத் தடுத்து நிறுத்தினாள்.. அவனுக்கு ஊட்டி விட்டாள்…

வாங்க மறுத்து அவளையே பார்த்துக் கொண்டு இருந்தவனிடம்…

"உடம்புசரியானதும் சண்டைப் போடுங்கள்... இப்போ சாப்பிடுங்க ப்ளீஸ்" என்றவளின் இரண்டு சொட்டுக் கண்ணீர் அவள் கன்னத்தில் வழிந்தது.

அவளின் கண்ணீரைக் கண்டு மனம் இளகிய போதும் இறங்கி வர‌ மனமில்லாமல் அவளையே பார்த்தவனின்‌ அந்தப் பார்வையில் இருந்த கேள்விக்குப் பதில் அவளிடம் இருக்குமா…

வேகமாக அவன் அருகில் அமர்ந்தவள் மீண்டும் அவனுக்கு ஊட்டிய‌ உணவை வாங்கவில்லை அவள் கணவன்…அவனின் இந்த அழுத்தம் அவனிடம் இறங்கி வர‌ வைத்தது அவளை.

மென்மையாக அவன் கன்னத்தைத் தன் இரு கரங்களால் பிடித்து மெல்ல அவன் இதழில் முத்தம் வைத்து "சாரி, இனிமேல் சண்டைப்போட்டாலும் இப்படி உங்களை விட்டுட்டு வர மாட்டேன், ப்ளீஸ் சாப்பிடுங்கள்"… என்றவள்
மீண்டும் இட்லியை அவளுக்கு ஊட்டினாள்.

இப்பொழுது அவள் தந்த உணவை உண்டவனின்‌செயலில் காதல் மட்டுமே இருந்தது… உணவினை உண்டவனின் கோபம் குறையவில்லை என்பது அவன் விழிகளைப் பார்த்த அவளுக்குப் புரிந்தது.

உண்டு‌ முடித்ததும்‌ அவனுக்கு ‌மருந்தினைக் கொடுத்தவள் படுக்க வைத்தாள்.

நெற்றியில் தைலத்தை மிருதுவாகத் தேய்த்து விட்டதில் உறக்கத்திற்குச் சென்றான் அதியமான்.

கணவன் உறங்கியதும் வெளியே வந்த மகளை நன்றாகப் பிடித்துக் கொண்டார் அவள் தந்தை கங்காதரன்.

தன்னறைக்கு அழைத்துச் சென்றவர்…


"என்னம்மா நீ.. அவருக்கு உடல் நிலைசரியில்லை என்று தெரிந்தும் சண்டைபோட்டுட்டு இங்கே வந்திருக்க" என்றார்.

"அப்பா எனக்குத் தெரியாது, அவருக்கு முடியவில்லை" என்றவளின் வார்த்தைகள் முடிக்கும் முன்பே அழுதாள் தாரா…

மகளின் வார்த்தைகளைத் தெரிந்த உண்மையில் அவளை அணைத்தவர் "இங்கே பாரு, தாரா…‌கணவன்‌ மனைவியின் இடையே சண்டை வரும்…அதற்கெல்லாம் கோபித்துக் கொண்டு வந்தால் நல்லாவா இருக்கும்... நீ‌ அவரிடம் சொல்லாமல் வந்திருக்க… அவருக்கு மேலுக்கு முடியாதிருந்த போதும் உன்னைத் தேடிதானே வந்திருக்காரு… அவங்க வீட்டிற்குப் போகவில்லை பார்த்தாயா… நீ உடம்புசரியில்லாத கணவனைக் கவனிக்காமல் இங்கே வந்து ஆட்டம் போடற என்று‌ உன்‌ மாமி, அங்கே தாரிகாவிடம் சண்டைபோடறாங்கள் என்று அவள் ஒரு மூச்சுகத்திட்டு‌ இருந்தாள்…

நீ தான் அந்த வீட்டின் மூத்த மருமகள். உன்னுடைய பொறுப்புச் சொந்த விருப்ப வெறுப்புகளைத் தாண்டிய கடமைத் தாரா‌” என்று தன்மகளுக்கு அறிவுரைக் கூறினார்.

"புரியுது அப்பா.. நான் தப்புச் செய்துட்டேன்... இனி‌ இப்படி நடக்காது" என்றவள்.

"சாரிப்பா உங்களுக்கும் என்னால் அவர் வீட்டுச் சைட் பதில் சொல்ல வேண்டி வந்திடுச்சு" என்றாள்.


"இங்கே பார், தாரா…‌ உன்னிடம்‌சொல்லுவதறக்கென்ன... மருமகன் தன் தவறை உணர்ந்து என்னிடம் வந்து மன்னிப்புக் கேட்டார்தெரியுமா… அவரிடம் நீ சண்டைப் போடாதே” என்று அன்று நடந்ததைச் சொன்னவர் அவள் கோபத்தின் அளவைக் குறைத்து இருந்தார் அவருக்கு அறியாமலேயே.

கங்காதரனுக்குத் தன் மருமகன் பற்றி யாரும் தவறாக நினைக்கக் கூடாது.. அவருக்கு எல்லா நல்லது நடக்கனும் என்றொரு தந்தையாக‌ நினைத்தார். அந்த அளவுக்கு அவருக்கு அதியமான் மேல் பாசம் இருந்தது. அதை உணர்வும் செய்தாள் தாரா.

மெல்ல மூக்கினை ஊரிஞ்சியபடி "உங்க பொண்ணு நான் தா அப்பா.. அவர் உங்க மருமகன்" என்றாள் பொறாமையில்.


"நீ என் பொண்ணுதான்..யாரு இல்லை சொன்னா.. அவருக்கு அதுக்கு மேலே" என்று கூறினார்.

தாராவிற்கு‌ மனதில் மிகவும் சந்தோஷமாக இருந்தது தன் கணவனைத் தவறாக நினைக்காமல் அவரை‌சொந்தம் பிள்ளைகளுக்கு மேலாகப் பாசம் காட்டும் பெற்றவரின் அன்பு அவளை நெகிழ வைத்தது.

தன்னுடைய சண்டைக்கும் கோபத்துக்குமானக் காரணம் பலமிழந்து இருப்பது புரிந்தது…‌ இனி‌ இந்தக் கோபமானின் சினத்தை எப்படித் தனிக்க என்று மனதில் புலம்ப மட்டுமே முடிந்தது தாராவிற்கு.


மதியம் நல்ல சூடான குருமிளகு ரசம் வைத்து அவனுக்குக் கொடுத்தாள்.
அவள் தந்த உணவினை உண்டவனின்.. மருந்தையும் அருந்தினான்… அவள் சேவகம் எல்லாம் ஏற்றுக் கொண்டவன் அவளிடம் ஒரு வார்த்தைப் பேசவில்லை.

அதிமயானுக்கு உடல் நிலைசரியில்லை என்றறிந்து மகேந்திரன் தன் தாய் மற்றும் மனைவியுடன் ‌பார்க்க வந்தான்.

"‌இப்போது எப்படி இருக்கிறது ஆதி "…
என்ற மகேந்திரன் கேள்விக்கு…

"பரவாயில்லை மகி.. ரொம்பச் சோர்வாக இருக்கு... செல்ஃபாக எதுவும் செஞ்சுக்க முடியல... அது தான் கஷ்டமாக இருக்கு" என்றான் அதியமான்.


"அதுக்கென்ன..அது தான் தாரா இருக்கிறாள் இல்லையா" என்றவன் அதன் பின் பேசிய பேச்செல்லாம் பொதுவான விஷயங்கள் இருந்தது.


நளினியோ “என்னடி நீ வந்த இரண்டாவது நாளிலேயே உன்னைப் பார்க்காமல் காய்ச்சல் வந்திடுச்சு உன்னோட வூட்டுக்காருக்கு” என்று‌க் கேலிச்‌செய்தாள்.

"நீ‌ வேற ஏன்டி … வந்து இவ்வளவு நேரம் ஆகிடுச்சு... ஒரு வார்த்தைப் பேசவில்லை... என்னிடம் அவர் கோபமாக இருக்காரு டி" என்றாள்.


"அவர் கோபம் படும் அளவிற்கு... நீங்க என்ன பண்ணினீங்க மேடம்" என்று கேட்டாள் நளினி.


அதென்று இழுத்தவள் பின் நடந்த எல்லாமே கூறினாள்…


"பைத்தியமா டி நீ... தாரா ரொம்பத் தப்பு டி நீ செய்தது" என்றாள் நளினி…

"அவர் அப்படிப் பண்ணியிருக்கக் கூடாதுதானே" என்றாள் கோபமாக.

"அவர் நேர்மையாக வந்து உன்னிடம் கேட்டு இருந்தால், இந்தக் கல்யாணம் பண்ணிக்கொள்ள நீ சம்மதம் சொல்லி இருப்பாயா" …‌ என்று கேட்டாள் நளினி

இல்லை என்று தலையை ஆட்டிய தாராவின் செயலில் அது தான் இப்படிப் பண்ணி இருக்காரு... அது‌மட்டுமில்லை…

"தாரிகாவின் கல்யாணம் புடவை எடுக்கும் அன்றைக்கு, உன்னை உங்க அம்மா வேதனைப் படுத்தியது தெரிந்த உடனே வந்துட்டாரு‌ இங்கே… உங்க அம்மாவிடம் பெத்தவங்களாகவே‌ இருந்தாலும்‌... என் மனைவியை அவமானப் படுத்துவதை, என்னால் தாங்க முடியாது என்றவர், நடந்த எல்லாமே சொல்லி... உங்க அப்பாவிடம் 'நான் கால் விழுந்து மன்னிப்புக் கேட்கிறேன்' என்னவரைத் தடுத்த உங்க அப்பா, நாங்கள் தான் மாப்பிள்ளை உங்களுக்கு நன்றி கடன் பட்டு இருக்கோம்… விளையாட்டுத் தனமாக அவள் அமரனுக்குத் தாய் என்று அடையாளபடுத்த பட்டு‌இருக்காள். எல்லோருக்கும் உண்மை‌யைச் சொல்லிட்டு இருக்க முடியாது.

என் இன்னொரு மகள் இப்ப வரைக்கும் வாயைத் திறக்கவே இல்லை... அதனால் இனியும் உண்மையை‌சொல்ல வாய்ப்பு இல்லை என்று தான் நினைக்கிறேன். இந்தச் சூழ்நிலையில் என் மகள் தாராவின் திருமணம் கேள்விக்குறியாகத் தான் இருக்கும். நீங்கள் செய்தது நல்லதுதான் அதில் எனக்கு உடல் நிலைப்பாதிக்க நீங்கள் காரணம் இல்லை, மன்னிப்பெல்லாம் கேட்க வேண்டாம் நீங்கள்… நான் தான் என் ஆயுள் வரைக்கும் உங்களுக்கு நன்றிகடன் பட்டு‌இருக்கேன். என் இரு‌மகள்களின்‌ வாழ்க்கையைச் சரி பண்ணி இருக்கீங்க" என்று அவருக்கு நன்றி சொன்னாங்க உன்னோட அப்பா அம்மா. இதெல்லாம் உன்னிடம் சொல்ல வேண்டாம் என்று‌சொல்லிட்டுப் போனார். அதனால் தான் யாருமே உன்னிடம் சொல்ல வில்லை" என்றாள் நளினி.

நடந்த‌தைக் கேட்டதும் தாராவிற்குத் தன் தவறு புரிந்தது.

"அதுதான் அவருக்குக் கோபம் வந்திருக்கு.. ஆனால் வீட்டில் பேசிட்டேன் என்று‌ என்னிடம் சொல்லணும் தானே என்ற தாராவிடம் .. "அதுதான் ஏன் தெரியவில்லை தாரா" என்ற நளினி "வா அவரை‌பார்க்கலாம்" என்றவள் அதியமான் காண‌வந்தாள்.

"எப்படியிருக்கு உங்களுக்கு அண்ணா" என்ற‌ நளினியின் கேள்விக்கு…

"நல்லா இருக்கேன் நளினி… இன்றைக்குக் கிளம்பிருவேன் என்று நினைக்கிறேன்.
வேலை நிறையப் பெண்டிங் இருக்குமா.. இனியன் பார்க்கச் சொல்லி இருக்கேன், இருந்தாலும் நான் போகணும் இல்லையா" என்றான்.

புரியுது அண்ணா என்றவள் தாராவின் முகத்தைப் பார்த்தாள்.
கலங்கிய கண்களுடன் கணவனைத் தான் பார்த்துக் கொண்டு இருந்தாள்.

மகேந்திரனைப் பார்த்து நளினி "உங்களை அம்மா கூப்பிட்டாங்க" என்று‌ அழைத்து வந்தாள்.
தன்னவள் எதற்குப் பொய்ச் சொல்லிக் கூப்பிட்டு வந்தாள் என்று புரிந்தது மகேந்திரனுக்கு.

இருவரும் சென்றதும் படுக்கையில் இருந்து மெல்ல எழுந்தவனைப் பிடித்த தாராவின் கையை எடுத்து விட்டவன் "நானே போயிக்கிறேன்‌" என்ற முகம் பார்க்காமல் சொன்னவன், குளியல் அறைச்சென்று ஃப்ரெஷ்ஷாகி வந்தான்.

இப்போது தான் கொஞ்சம் நன்றாக இருந்தது அவனுக்கு.

தன் படுக்கையில் வந்து அமர்ந்தவன் தன் பையில் இருந்து மடிக்கணினி எடுத்து வேலையைப் பார்க்கத் தொடங்கினான்.

அவன் அருகில் வந்து அமர்ந்தாள் தாரா…

"என்னங்க இப்போது தான் கொஞ்சம் பரவாயில்லை உங்களுக்கு, உடனே வேலையைப் பார்க்கணுமா…
எடுத்து வைங்க மெதுவாகப் பார்க்கலாம்… இல்லையென்றால் நான் உதவுகிறேன் , என்ன செய்ய வேண்டும் என்று‌ச் சொல்லுங்க" என்று அவன் மடியில் இருந்து லேப் டாப்பை வாங்கினாள்.

"இப்போது நீ செய்து தருவாய், இனி வரும் காலத்தில் யாருச் செய்து தருவா‌ங்கு.. வேண்டாம் விடு நானே பார்த்துக்கொள்கிறேன்" என்றான்.

அவன் கேள்வி புரியாமல் "அப்பவும் நான் தான் செய்து தருவேன் வேறு‌யாரு… என்றபடியே சொல்லுங்க" என்றாள்.

"நீ தான் என்னை விட்டுப்போக வேண்டும் என்ற‌ மனநிலையில்‌இருக்கிறாய்… நீ‌என்னை விட்டுப்பிரிந்துப் போய்விட்டால்... இதெல்லாம் யாரிடம் நான் எதிர்பார்க்க" என்றவனின் வார்த்தைகள் கேட்டு அப்படியே அமைதியானாள் தாரா.

தன் வேலையைத் தொடர்ந்தான் அதியமான் அப்பொழுது இனியன் அழைத்திருந்தான்.

"என்னடா... சொல்லு" என்றதும்… முடிக்க வேண்டிய வேலையைச் சொன்னவன் "எப்போது வர நீ‌" என்று‌க் கேட்டான்.

"நாளைக்கு வந்து
டுவேன் டா" என்றான் அதியமான்.

கணவனின் வார்த்தைகளைக் கேட்டவன் நாளைய பயணத்திற்குத் தயாரானாள்.

ஆனால் தன்னுடன் அழைத்துச் செல்ல மாட்டான் தன் கணவன் என்பதை அறிந்தால் என்ன ஆகும் அவள் காதல் மனம்…

தொடரும்…
 
Top