மனம் - 21
எந்த ஆழமான கேள்வியின் உள்ளேயே பதில் இருக்கிறது…
நாம் தான் கேள்வியின் அர்த்தத்தை உணராமல் கேட்டு அதற்கான பதிலுக்காகக் காத்திருக்கிறோம்... காலம் சரியான நேரத்தில் நமக்குப் பதிலைத் தந்துவிடும்...
தாய்மையின் உணர்வுகளை உடலால் உணரவில்லையெனினும் மனதால் உணர்ந்தாள் தாரா…
அமரன் இல்லாத அவள் நாட்கள் நகராது… அவளோட காதல் கல்யாணம் வரை வந்ததும், அதியமானைக் கைப்பிடித்ததும், எல்லாம் அவன் தான் அவளுக்கு ஈட்டித்தந்தது… இந்த வாழ்க்கையை அழகானதாக மாற்றினான்... தன்னுடைய தாய்மையை அவனால் தான் முழுமை பெற்றது அவளுக்கு…
தாரிகா மனதில் அமரன் வேண்டும் என்ற எண்ணம் இல்லை… அவனுக்குத் தாரா அம்மா என்ற மாறியது அப்படியே இருக்கட்டும் என்று நினைத்தாள். தாராவைப் போன்று தன் பெயரும் கெட்டு அவமானப்பட அவள் தயாராக இல்லை…
அதியமானுக்கோ தன்னை முதலில் அப்பா என்றழைத்த அமரனை யார் கேட்டாலும் விட்டுக்கொடுக்க முடியாது... தன் வாழ்க்கையில் உண்மையான அன்பும் பாசமும் என்ன என்பதைப் புரியவைத்தான் இந்த அமரன்… அவனோட வரவுதான், குடும்பத்தில் தன்னுடைய நிலையென்ன என்பதைப் புரியவைத்தவன் இந்தக் குட்டி அமரன்.... எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் தன் மேல் அன்புக் காட்டும் தாராவை, தன் வாழ்க்கையில் கொண்டு வந்தவன். அவனை யார் கேட்டாலும் தர மாட்டேன் என் மகன் என்று அழுத்தமாக மனதில் பதித்து வைத்திருந்தான் அதியமான்.
திருமணம் முடிந்தப் பின் தன் வேலையை விட்டு, முழு நேரக் குடும்பத்தலைவியாக மாறிவிட்டாள் தாரிகா... தன் மாமியாரிடம் நல்ல மருமகள் என்று பெயரெடுக்க அவள் நாள் முழுவதும் பாடுப்பட்டாள்.
தாரிகாவைப் பிடித்து இருந்த போதும் பல நேரங்களில் தாராவோடு ஒப்பிட்டுப் பார்க்கத்தான் தோன்றியது சாந்திக்கு... தாராவிடம் இருக்கும் பொறுமையும் நிதானமும் தாரிகாவிடம் இல்லை…
தாரா எதிர்த்துப் பேசமாட்டாள்.. ஆனால் சரி தவறை அழகாகச் சுட்டிக்காட்டி வேலை வாங்கும் பக்குவம் இருக்கும்... தாரிகாவிடம் அதிகாரத்தோரனை மட்டுமே இருந்தது…
இரண்டு பேரும் ஒரே கருவறையில் பத்து மாதங்கள் உருவாகி ஒன்றாக இரட்டைகளாக இருந்தப்போதும் அவர்களிடையே ஆயிரம் வித்தியாசம் இருந்தது…
தாராவின் நல்லக்குணங்கள் பிடித்தப்போதும்... அவள் திருமணம் சாந்தியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை அதனால் தாரிகாவை நன்றாக அன்பாகப் பார்த்துக்கொண்டார். இதனால் தாரா மனதளவில் வேதனைப்பட வேண்டும் என்ற அவர் எண்ணமாக இருந்தது. எப்படியாவது அதியமானை மற்றும் தாராவைப் பிரிக்க வேண்டும் என்ற எண்ணம் அவர் மனதில் விதைத்து வேரூன்றி இருந்தது.
அதற்கான சந்தர்பத்திற்குகாகக் காத்திருந்தார். அவரோட எண்ணத்தைத் தெரிந்து வைத்திருந்தாள் தாரிகாவும்.
காலை நேரம் அலுவலகத்திற்குத் தயாரகிக்கொண்டுருந்தான் சதீஷ்…
அவனிடம் வந்தாள் தாரிகா…
“என்னங்க நம்ம ஹனிமூனுக்கு எங்கே போகலாம்” என்றாள் அவனுக்குக் கழுத்தில் டையைக் கட்டி விட்டபடியே…
“கண்டிப்பாக ஹனிமூன் போயே ஆகணுமா? தாரு… நமக்குத் தான் எப்போதே எல்லாம் முடிந்து விட்டதே… வேணும்மென்றால் சுற்றிப்பார்க்கப் போகலாம் எனக்கும் ஒரு பிரேக் வேணும்” என்றான் சதீஷ். அவனை நெருங்கி மையலோடு எங்கே போகலாம் என்று கேட்டாள்…
“நீயே யோசித்துவைப் போகலாம்” என்றான்…
“சரிங்க” என்றவள் மிகவும் சந்தோஷமாகத் தங்கள் தேன் நிலவுப் பயணத்தை எண்ணிக் கனவுக் கண்டாள் தாரிகா.
அவளுக்கு வாழ்க்கை எந்தப் பிரச்சனையும் இல்லாமல் தெளிந்த நீரோடையாகச் சென்றது…
தன் தொழிலை முதல் கட்டத்தில் இருந்து அடுத்தக்கட்டத்திற்குக் கொண்டு செல்ல இரவு பகல் பாராமல் உழைத்தான் அதியமான்.
சதீஷ் மற்றும் தாரிகா, தேன் நிலவுச் சென்றனர். தங்கள் வாழ்க்கையை எந்தக் கவலையும் இல்லாமல் வாழ்ந்தனர்.
நாட்கள் வேகமாகச் சென்றது… நீண்ட நாட்களுக்குப் பிறகு மகளைக் காண வந்தனர் கங்காதரன் தம்பதியினர்…
தாரிகாவின் திருமணத்திற்குப் பின் தாராவைக் கண்டு மனம் விட்டுப் பேச முடிவுச் செய்திருந்தனர்.
தன்னைக் காண வந்த பெற்றோரின் வரவில் மிகவும் சந்தோஷமாக இருந்தாள் தாரா.
அவர்களுக்கு வேண்டி எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்தாள்…
தங்கள் வீட்டிற்குக் கோபத்தை விட்டு வந்திருக்கும் தன் மாமியார் மற்றும் மாமனாரின் வருகையில் சந்தோஷம் அடைந்தான் அதியமான்.
தன் மனைவியின் மனதைப் புரிந்துக் கொண்டார்கள் என்பதே அவனுக்குப் போதுமானதாக இருந்தது.
தன்னால் இழந்தப் பெற்றவர்களின் அன்பு, அவளுக்குக் கிட்டிய சந்தோஷம் அவன் முகத்தில் இருந்தது.
“சரி மாமா, நீங்க உங்க மகளோடு பேசிட்டு இருங்க… எனக்கு முக்கியமான வேலை விஷயமாக வெளியூர்ச் செல்ல வேண்டி இருக்கிறது. என்னால் உங்களோடு இந்தச் சந்தர்பத்தில் இருக்க முடியவில்லை என்னை மன்னித்து விடுங்கள் ” என்றான் அதியமான்.
"அதனாலென்ன மாப்பிள்ளை ... நீங்கள் உங்க வேலையைக் கவனிங்கள், நாங்கள் இனியும் இங்கே அடிக்கடி வருவோம், கவலைப் படாதீங்கள். மகனில்லாத எங்களுக்கு நீங்கள் தான் அந்தக் குறையை இல்லமால் பண்ணினது உங்கள் வரவுதான் மாப்பிள்ளை, எங்கள் பையன் வீட்டுக்கு வர எந்தத் தயக்கமும் எங்களுக்கு இல்லை மாப்பிள்ளை” என்ற கங்காதரனிடம்...
"அதுதான் பையன் என்று சொல்லிடீங்களே மாமா... அப்பறமென்ன மாப்பிள்ளையெச் சொல்லித் தள்ளி வைக்கறீங்க... என் பெயர்ச் சொல்லியே நீங்கள் கூப்பிடலாம்" என்றான் அதியமான். சரிங்க மாப்பிள்ளை” என்றவர் ... இல்லை ஆதி என்று தன் மருமகனை மகனாக அழைத்தார் கங்காதரன். அப்பொழுது அவர் மனம் நிறைந்துக் கண் கலங்கியது சந்தோஷத்தில்.
"சரி மாமா நான் தயாராகணும், எனக்கு நேரமாகுது" என்று தன் அறைக்கு வந்தான் அதியமான்.
தன் அறையில் தயாராகச் வந்தவன் அங்கே தனக்கு வேண்டிய எதுவும் இல்லாமல் வெறுமையாக இருந்தது. அவனுக்காக என்றும் பார்த்துப் பார்த்து எல்லாம் செய்யும் தன் மனைவி, இன்றைக்குத் தன்னைக் கவனிக்கவில்லை என்பதை உணர்ந்தவன் “தாரா” என்று
அழைத்தான்…
சமையலறையில் சமைத்துக் கொண்டு இருந்தவள் எதற்கு இப்படிச் சத்தமாகக் கூப்படறாரு… அமரன்தூக்கத்தில் இருந்து எழுந்து விடுவான் என்று வேகமாக வந்தாள்.
“ஏங்க இப்படிச் சத்தமாகக் கத்தறீங்க…பையன்எழுந்திருக்கப் போறான்…
எதுக்குக் கூப்பிட்டிங்க” என்றப்படி அவன் அருகே வந்தாள்..
திருமணமான இத்தனை நாட்களில் இவ்வளவு உரிமையாகப் பேசும் மனைவியை இன்று தான் பார்க்கிறான்…
சமையலறையில் செய்து கொண்டு இருக்கும் வேலையைப் பாதியில் விட்டு வந்தவளின் ஆடைக் கலைந்து வியர்வை முகத்தில் இருக்க அவனைப் பார்த்தப் பார்வையில் வீழ்ந்துத் தடுமாறியவன்... மெல்ல அவள் இடையைப் பிடித்துத் தன்னருகே இழுத்தவன் அவள் கழுத்தில் இதழ்ப் பதித்தான்…
“ஐயோ… என்ன செய்யறீங்க… இதுக்குத் தான் கூப்பிட்டிங்களா”… என்று அவனை முறைத்ததில் “பக்கா ஹவுஸ் வெயிஃப் மேக் டி நீ" என்று மீண்டும் அவளைத் தன்னோடு இறுக அணைத்தான்…
அவன் அணைப்பில் எப்பொழுதும் போல அவள் கோபம் அணைந்துப் போனது…
எவ்வளவு கோபமோ... துயரமோ மனதாங்கலோ எதுவாக இருந்தாலும் அவன் ஒற்றைப் பார்வை… இல்லை அவன் அணைப்பில் அணைந்து விடும்.
அதவளது பலவீனம் இல்லை, அவள் மனதில் ஊன்றியிருக்கும் அவள் காதலின் ஆழம் தான் காரணம்…
அவனைக் காதலிக்கும் அதியமான் அவளுக்காக என்ன வேணுமென்றாலும் செய்வான். அவள் மனதில் அவனுக்கான காதலை அறிந்தால் என்ன செய்வான், அவளைக் கொண்டாடித் தீர்க்க மாட்டானா….
அவள் காதலை அறியும் நாளும் வெகு விரைவில் அவனைத் தேடி வந்துகொண்டிருந்திருந்தது.
அவளை அணைத்து ஆழ்ந்த அவன் கொடுத்த இதழ் முத்தம் அவளை ஆட்டிப்படைத்தது… அவளுள் இருக்கும் காதலை மேலே இழுத்துக் கொண்டு வந்தது…
அவள் காதலின் வீரியம் தாக்கியதில் அவன் கைகளில் சரணடைத்தாள்…
அவள் இடையில் கைவிட்டு அவளைத் தன்னோடு இறுக்கிறவன் செயலில் அவனோடு அவன் உடலோடு ஐக்கியமாகும் வேகம் இருந்தது இருவருக்கும்…
ஏனோ எல்லாம் முடிந்தும்... இன்றைக்கே தன்னை விட்டுப் போய்விடுவாளோ என்பது போல் அவளைத் தன்னோடு பொத்தி வைக்க முயன்றான் அதியமான்.
அவன் மனதில் இதுவரை இல்லாதொரு சஞ்சலம் உண்டானது தீடிரென. அதுமனதை அழுத்த அவள் முகத்தைத் தன் கைகளில் ஏந்தியவன்…
“தாரா… உன் வாழ்க்கையில் யார் வந்தாலும்… இருந்தாலும்.. நான் மட்டும் தான் எப்பவும் உனக்கு முதன்மையாக இருக்கவேண்டும்… என்னைத் தவிர்க்கும் உன் செயல் என்னால் தாங்க முடியலடி”..என்று மீண்டும் அவள் இதழ்களைக் கடுமையாக முத்தமிட்டுப் பதிய வைத்தான் அவள் கணவன்…
இதழ் முத்தம் முடிவில்... “நான்எப்போ உங்களைத் தவிர்த்தேன்” என்று மூச்சு வாங்க அவள் கேட்டதில் பாதி வார்த்தைகள் மீதிக் காற்றாக வந்தது அவள் இதழிலிருந்து…
அவள் செயலில் மயங்கியவன் மீண்டும் இதழில் மெல்ல இதழ்ப் பதித்து…
”நீ தானே எனக்கு எல்லாமே எடுத்து வைப்பாய்.. இன்றைக்கு எங்கே என் டிரஸ்” என்று இடுப்பில் கையை வைத்து நின்றிருந்தான் அவள் கணவன்.
அவனைச் செல்லமாக முறைத்தாள் வேகமாக அங்கே இருக்கும் அலமாரியில் இருந்து அவனுக்கு எடுத்து வைத்திருந்த ஆடையைக் கொடுத்தவள்... “நான் மறக்க எல்லாம் இல்லை.. எல்லாம் எடுத்து வைத்துவிட்டேன்... நீங்கள் தான் பார்க்கவில்லை” என்றாள் அவன் கண்களில் ஊடுருவி… இதழில் புன்னைகையோடு அவள் பார்த்தப்பார்வையில்
‘அதில் நீங்கள் செய்வது விளையாட்டுப்போல் இருந்த போதும்… அதில் இருக்கும் உங்கள் மனதின் எண்ணம் எனக்குத் தெரியவும் செய்கிறது’ என்ற செய்தி அவனுக்கு இருந்தது…
அதை உணர்ந்தவன் மெல்ல இதழில் உண்டான சிரிப்பை அடக்கியவன், அவளுக்கு முதுகைக் காட்டியபடி, திரும்பி நின்றான்… வேகமாக அவன் முன்னே வந்து அவனைப் பார்த்தவள்…
அவன் முகத்தைப் பார்த்த “அப்போது வேண்டும் என்று தானே செய்தீர்கள்” என்று அவனைக் கேட்கவும் அவள் தாய் அவளை அழைக்கவும்... சரியாக இருந்தது…
"உங்களை அப்பறம் பார்த்துக்கிறேன்" என்று சென்றாள் தாரா.
செல்லும் தன் மனைவியைப் பார்த்தவனுக்கு மனதில் என்னமோ, சரியில்லை என்றுக் கூறியது… என்ன என்று தான் தெரியவில்லை அவனுக்கு… அவளை விட்டுபிரிய மனமில்லாமல் தவித்தான் அதியமான்…
இரண்டு நாட்கள் அவளைபிரிந்து இருக்க வேண்டும்... செல்ல மனமே இல்லை அவனுக்கு.. என்ன ஆச்சு எனக்கு? ஏன் இப்படி மனதில் வேதனை உண்டாகுது… என்று உள்ளுக்குள்ளே தவித்தான்.
அவள் அருகில் இருக்கும் வரை எதுவும் தெரியவில்லை அவனுக்கு... விட்டு நீங்கிய அடுத்த நொடி மனம் தவிக்கத்தொடங்கியது...
தாராவைப் பார்த்த வரைக்கும் எந்த விதமான வருத்தமும் இல்லை வாழ்க்கையில்... பின் ஏன் மனம் இப்படி அடித்துக் கொள்கிறது என்று தன் படுக்கையில் அப்படியே விட்டத்தைப் பார்த்தபடியே படுத்தான் அதியமான்.அவன் முகத்தில் சிந்தனை ரேகைப் படர்ந்தது…
வேண்டாவெறுப்பாகப் பயணத்திற்குச் தயாராகிச்சென்றான் அதியமான்.
மருமகன் சென்றதும் தன் மகள் அருகில் வந்தார் புனிதா…
அமரனை அழுத்துக்கொண்டு கீழே இருக்கும் பார்க்கிற்குச் சென்றார்க் கங்காதரன். இந்தனிமையில் மகளிடம் மனம் விட்டுபேச முடிவு செய்தார் புனிதா.
படுக்கையறைக்கு வந்தருகே அமர்ந்தப் புனிதா.. தன் கைகளில் மகளின் கைகளை ஏந்தியவர் "என்னை மன்னித்து விடுத் தாரா… அம்மா உன்னை நம்பி இருக்கணும்… அப்பா உடல் நிலைச் சரியில்லாமலானதில்... என் மனதிலிருந்த கோபத்தில்... மருமகன் அவ்வளவு தூரம் எடுத்துச் சொல்லியும், என்னிடம் அவர் மன்னிப்புக் கேட்டும், உன் மேல் இருந்த கோபத்தை வளர்த்தி அதென்னைத் தரக்குறைவாக நடந்துக்கொள்ள வைத்துவிட்டது. நான் கொஞ்சம் பொறுமையாக யோசித்திருக்கேண்டும். என் மனநிலையை மாற்றியிருக்கணும். உன்னை அவமானபடுத்தி இருக்குக் கூடாது… அமரனை நான் ஒதுக்கி இருந்தாலும், அவன் என் பேரன் அல்லவா... குழந்தையிடம் என் கோபத்தைக் காட்டி ரொம்பக் கேவலமாக நடந்துக்கொண்டேன், என் பாவத்தை எங்கே போய்ச் சரி செய்வேன்" என்றவர் அழுக ஆரம்பித்து விட்டார்..
தவறு செய்தவருக்கு இருக்கும் இரண்டு ஆயுதம்... ஓன்று மன்னிப்பு இன்னொன்றுக் கண்ணீர்…
தன்னிடம் தன் தவறை ஒத்துக்கொண்டு மன்னிப்புக் கேட்கும் தாயின் நிலையைக் கண்டு பதறியத் தாரா..
“என்ன அம்மா நீங்க.. மன்னிப்பெல்லாம் கேட்டுட்டு… என்ன இருந்தாலும் நானும் பண்ணினது தவறு தான் அதற்கு நீங்க குடுத்துத் தண்டனை, சரி தான் … இதெல்லாம் கம்மிம்மா… உங்க நல்ல மனதிற்கு என்னையும் என் கணவரையும் ஏற்றுக்கொண்டதே ரொம்பப் பெரிய விஷயமாக நினைக்கிறேன்” என்று அப்பொழுதும் தாரிகாவை விட்டுக்கொடுக்காமல் பேசினாள் தாரா.
“ஏன் தாரா இவ்வளவு நல்லவளாக இருக்கிறாய்… உன்னைப் போல் தானே அவளையும் இந்த மடியில் தாங்கினேன்… உன்னில் இருக்கும் நல்ல குணம் சிறிதுகூட அவளுக்கு இல்லாமல் இப்படிச் சுயநலமாக இருக்கிறாள்” என்றவர் மீண்டும் அவளைக் கட்டுப்பிடித்து அழுதார் புனிதா.
“நீங்க என்ன சொல்ல வரீங்கம்மா... தாரிகா என்ன பண்ணினாள்” என்று கேட்டாள் தாரா…
"எல்லாம் பண்ணினதே அவள் தானேடி.. நீ அவள் குழந்தைக்குத் தாயாகி.. எல்லாப்பழியும் உன் மேல் ஏற்றுக்கொண்டு பெயரைக்கெடுத்துக்கிட்டாயே.. உன் மாமி அதனால் தானே இன்னும் உன்னைக் குடும்பத்தோடு சேர்த்தாமல் இருக்கிறார்…
தன் தாய்க்கு எல்லா உண்மையும் தெரிந்து விட்டது என்றதும் அதிர்ச்சியனாள் தாரா… மகளின் அதிர்ச்சியைக் கண்டு..
"எப்படி எனக்குத் தெரியும் நினைக்கிறாயா… மருமகன் தான் சொன்னாரு.. உன்னிடம் இதைப் பற்றிப் பேசக்குடாது என்று… எல்லா உண்மையும் சொன்னாரு" என்று எல்லா உண்மையும் கூறியவர்.. கங்காதரன் போனில் வந்த புகைப்படம் அனுப்பியதும்... அதனால் உடல் நிலைச் சீர்கெடக் காரணம் அதியமான் என்றும் அதற்குத் தங்களிடம் மன்னிப்புக் கேட்டதும் என்ற எல்லா உண்மையையும் புனிதா, தாராவிடம் கூறினார்.தன் கணவனின் செயலை அறிந்து அதிர்ச்சி அடைந்தாள்.
அப்போ இவர் தான் அப்பாவிற்கு உண்மையைச் சொல்லி இருக்கார்.. அதனால் தான் அவருக்கு மாரடைப்பு வந்தது என்ற நினைத்தவள் தன் தவறுக்கு அவன் மன்னிப்புக்கேட்டதைக் கூறியப் புனிதாவின் வார்த்தைகளை அவள் சரியாகக் கவனிக்கவில்லை…
தன் தந்தைக்கு உயிருக்குப் போராடக் காரணம், தன் கணவன் என்பது மட்டுமே ஆழமாகப் பதிந்தது. தன் தவறைத்திருத்துவதற்குத் தன்னைத் திருமணம் செய்துக்கொண்டான் என்று மனதில் தோன்றியப் புதிய கதைக்குத் திரைக்கதை எழுதினாள் அதியமானின் மனைவி.
தன்னைத் திருமணம் செய்யக்காரணம் அவள் காதல் மனதிற்கு மிகப்பெரிய வலியை உண்டாக்கியது.
புனிதாவோ தன் மகளிடம் மடைத் திறந்த வெள்ளம் எல்லாவற்றையும் கொட்டியவர் “நீ எப்பவும் நிதானமாகத் தான் எல்லா முடிவும் எடுப்பாய்… உன் மேல் நம்பிக்கை வைத்திருக்க வேண்டும்... நான் கோபத்தில் என் அறிவை இழந்துவிட்டேன்" என்றார்.
"உன்னை மகளாகப் பெற்றதற்குப் பாக்கியம் செய்திருக்கிறேன் தாரா… உன்னால் தான் மருமகன் உருவில் மகன் எங்களுக்குக் கிடைத்து இருக்கிறார்" என்றாள் தாராவின் அம்மா…
அன்றைய தினம் தன் கையால் மகளுக்குப் பிடித்த எல்லாம் செய்துக்கொடுத்து அவளைத் தாங்கினார்... என்னதான் அவளிடம் எல்லாம் கூறி மன்னிப்பைக் கேட்டப்போதும் தனக்கும் மகளுக்கும் இடையேவிழுந்த பிளவின் கீறலை அவரால் சரி செய்ய முடியவில்லை… அம்மா மகள் இருவருக்கும் இடையே இருந்த அன்னியோன்யம் குறைந்திருந்தது…
மகளின் வாழ்க்கையில் வந்த அவள் கணவன் அந்த இடத்தைப் பிடித்து இருந்தான்…
இரண்டு நாட்கள் தன் மகளின் வீட்டில் தங்கி இருந்த கங்காதரன் தம்பதியினர் தங்கள் வீடு திரும்ப முடிவுச் செய்தனர்.
தன் மகளிடம் வந்த கங்காதரன்… மெல்ல அவளை அணைத்து.. "உன் நல்ல மனசுக்கு எல்லாம் நன்றாக இருப்பாய், தாரா… உன் மனசிக்கேத்த மகராசன் தான் உனக்குக் கணவனாகக் கிடைத்து இருக்கார். அவர் கூட நீ ரொம்ப வருசம் சந்தோஷமாக வாழனும்" என்றவரின் வார்த்தைகள் முடிக்கும் முன் அவர் கண் கலங்கி விட்டது…
தந்தையின் அன்பில் உணர்ச்சி வசப்பட்டவள்… அவர் அணைப்பில் அழுதாள்… “இன்னும் இரண்டு நாட்கள் தங்கிட்டுப் போகலாம் தானே அப்பா" என்று அழுதாள். அவளிடம் விடைபெற்றுத் தங்கள் வீட்டிற்கு வந்தனர் கங்காதரன் தம்பதியினர்.
வேலைப் பளுவின் காரணமாக மேலும் இரண்டு நாட்கள் தாமதமானது அதியமானுக்கு. காதலின் விரகம் அவனை வாட்டியபோதும் தன் கடமையை முனைப்போடு முடிக்க உறங்காமல் வேலையைச் செய்தான். அவளோடு அலைப்பேசியில் உரையாட கூட அவனுக்கு நேரமில்லாமல் பறந்துக்கொண்டிருந்தான்.
அவளுக்கம் பெற்றோருக்கும் இடையே இருக்கும் பிணக்கம் மாற அவர்களுக்குத் தனிமையைக் கொடுத்துத் தன்னைப் பிஸியாக வைத்துக்கொண்டான். தன் மனைவிக்காகப் பார்த்து எல்லாம் செய்பவனின் காதலை உணராமல் அவனில் கோபம் கொண்டு இருந்தாள் தாரா.
அவர்கள் வீடு வந்து சில நாளில் கங்காதரனுக்கு ஆச்சரியம் இருக்கும் என்று அவர் நினைத்து இருக்க மாட்டார்கள்… அவர்கள்
பின்னே தங்கள் பெற்ற மகள் வருவாளென்று எதிர்பார்த்துருக்க மாட்டார்கள்.
எதிர்பாராதை எதிர் பார்ப்பது தானே வாழ்க்கை…
தொடரும்…