எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா -19

subasini

Moderator
மனம் - 19

உறவுகளின் மேல் என்னதான் கோபம் இருந்தாலும் நம்மைச் சார்ந்தவர் மேல் பாசம் இருக்கும்…

மாமியார் என்ற உறவிடம் ஒர் அளவிற்கு மேல் எதிர் பார்க்க முடியாது.

ஆனால் பெற்றவர்கள் அப்படியில்லையே.

தன் தாயின் மேல் தவறு இருந்தாலும் அதில் கூட நியாயம் இருந்தது.

ஆனால் தாராவின் பெற்றவர்கள் அவளை வேதனைப் படுத்தும் செயல் அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.

பெற்ற மகள் அல்லவா அவள். அந்தப் பாசம் மனதின் ஓரத்தில் இருக்கவேண்டும் என்று எதிர் பார்த்தான் அதியமான்.

தாராவிடம் கூடச் சொல்லாமல் அவள் வீட்டுக்குச் சென்றிருந்தான் அதியமான்.

காலை நேரத்தில் தீடிரென வருகைத் தந்திருக்கும் மருமகனைப் பார்த்துக் கங்காதரனுக்குப் பயம் மனதில் உண்டாயிற்று .

தாரிகாவிற்குப் பரீட்சை நேரம் என்பதால் நேரமாகப் பள்ளிக்குச் சென்றிருந்தாள்.
திருமணத்திற்குப் பின் வேலையை விடவேண்டும் என்பதால் லீவ் எடுக்காமல் சென்று கொண்டிருந்தாள்.

"என்ன மாப்பிள்ளை… வீட்டில் எல்லோரும் நல்லா இருக்காங்களா" என்று மறைமுகமாக அவர் விசாரித்தார் அதியமானிடம்.

"எல்லாம் நல்லா இருக்காங்க மாமா"… என்றவன் எந்தத் தயக்கமும் இல்லாமல் முகத்திற்கு நேராகக் கேட்டான் தன் அத்தையிடம்.

"உங்களுக்கு என்ன பிரச்சினை அத்தை, தாராவிடம்… ஏன் அவளை இப்படி அவமானப் படுத்தறீங்க… அவள் தவறு என்றால் நானும் தவறு தான்.. என்னை மட்டும் மன்னித்து அவளை ஏன் வேதனைப் படுத்தறீங்க" என்று கேட்டான்.

"அவள் செய்தது எங்களால் ஏற்றுக் கொள்ள முயலவில்லை மாப்பிள்ளை.. அவள் இப்படிச் செய்வாள் என்ற உண்மை என் உயிர் வரை சென்று கொல்லுது" என்று தன் துயரத்தைத் தன் மகனைப் போல நினைத்து அதியமானிடம் பகிர்ந்தார் புனிதா.

"உங்க மனதின் எண்ணங்கள் சரி தான்… அவள் அப்படிச் செய்ய மாட்டாள்‌ அத்தை… அவள் எந்தத் தவறும் செய்யாதவள் .. ஒரு பாவமும் அறியாத நல்ல மனம் படைத்தவள் ‌. உங்கள் மகளைப் பற்றி உங்களிடம் நான் சொல்லும் அளவுக்குத் தான் உங்களுக்கு அவளைப் பற்றித் தெரிந்து இருக்கிறது" என்றான் அதியமான்.

"என்ன சொல்ல வரீங்க மாப்பிள்ளை… அவள் செய்தது சரி என்றா"…

" நீங்கள் அவள் தவறைப் பற்றிப் பேசறீங்க அத்தை அந்தத் தவறே அவள் செய்யவில்லை என்கிறேன்" என்றான் அதியமான்.

"நீங்கள் சொல்வது எனக்குப் புரியவில்லை... புரியும் படிச் சொல்லுங்கள்" என்றார்க் கங்காதரன்.

"இந்த விஷயத்தை இது வரைக்கும் யாரிடமும் நான் பகிர்ந்து கொள்ள வில்லை… என் பெற்ற அம்மாவிடம் கூட இதெல்லாம் சொல்லி, எல்லாம் சரி பண்ணியிருக்க முடியும்... ஆனால் அதெல்லாம் செய்ய வில்லை… அப்படி எங்களைப் புரிய வைக்கத் தேவை இல்லை என்று எண்ணினேன்... ஆனால் என் மனைவின் மரியாதை மற்றும் அவளை அவமானப் படுத்தும் எந்தச் செயலும் என்னால் தாங்க முடியாத மாமா. அது தான் உங்களிடம் சொல்லுகிறேன்" என்றான் அதியமான்.
"சொல்லுகிறேன் ஆனால் எதையும் யாரிடமும் கேட்க மாட்டீங்க என்று நம்பிச் சொல்லுகிறேன்" என்றவன் தாரா எப்படி அமரனுக்குத் தாயானாள் என்றும் அது‌யாருக்கெல்லாம் தெரியும் என்றும் கூறியவன்… இந்த இக்கட்டான சூழ்நிலையைப் பயன் படுத்தி அவளைத் திருமணம் புரியக் காரணம் தன் காதல் என்று எல்லாம் ஒன்று விடாமல் கூறியவன்…

"என் வீட்டில் இருக்கும் பிரச்சினை எல்லாம் நான் பார்த்துக் கொள்கிறேன்.. ஆனால் நீங்கள் அவளை வேதனைப் படுத்த நானும் காரணம் என்பதால் மட்டுமே நான் இங்கு இதைக் கூறுகிறேன்" என்றான் அதியமான்.

"நீங்கள் அவளுக்குப் பாசத்தில் சீராட்ட வில்லை என்றாலும் பரவாயில்லை… அதற்கு நான் இருக்கிறேன்… அவளை வேதனைப் படுத்தாதீர்கள்" என்று தன் மனைவியின் பெற்றவர்களிடம் பேசிக்கொண்டு இருந்தான் அதியமான்.

அவன் காதலும் அவள் மேல் அவனுக்கு இருக்கும் பாசமும் நன்றாக உணர முடிந்தது கங்காதரன் தம்பதியருக்கு... தன் மகளுக்கு இப்படி ஒரு நல்லவன் கணவனாக வந்ததில் முதல் முறையாக மகிழ்ச்சி அடைந்துள்ளனர் தாராவின் பெற்றவர்கள்.

எங்களை மன்னித்து விடுங்கள் மாப்பிள்ளை என்றவளுக்குக் கண்ணீர் நிற்கவில்லை…

இந்தச் சிறிய வயதில் எவ்வளவு கஷ்டங்களைக் கடந்து வந்து இருக்கிறாள். எந்த வருத்தத்தையும் வெளியே காட்டாமல், எல்லாம் பொறுமையாகக் கையாண்டு, தன் உடன் பிறந்தவளின் குழந்தையைப் பெற்ற பிள்ளையை விடப் பாசமாக வளர்த்து வரும், தன் மகள் தாராவின் மேல் மரியாதை உண்டானது கங்காதரன் மற்றும் புனிதாவிற்கு. தங்கள் தவறும் புரிந்தது.

இனி என்ன செய்து அவளைச் சமாதானம் படுத்த என்று தினறி நின்றனர்.

"இப்போதே அவளிடம் எதுவும் இது பற்றிப் பேச வேண்டாம். இனி‌அவளை நேரில் பார்க்கும் போது வேதனைப் படுத்தாமல் இருந்தாலே போதும். அவள் முகம் வேதனையில் வாடுவதைப் பார்க்கும் சக்தி எனக்கு இல்லை மாமா… உங்களுக்கு உடல் நிலைச்சரியில்லாமல் போகவும் காரணம் நான் தான். அவள் மேல் எந்தத் தவறும் இல்லை… எதாவது தவறாக நினைத்து விடாதீங்க மாமா, என்னை மன்னித்து விடுங்கள்" என்றவன் அவர் காலில் வீழ்ந்தான்…


பதறியக் கங்காதரன் ‌ "என்ன மாப்பிள்ளை… விடுங்கள்… நடந்த எல்லாம் மறந்துருங்க… என் பொண்ணை நீங்கள் இவ்வளவு அன்போடு பார்த்துக் கொள்ளவதே போதும் விடுங்கள்" … என்று தன் மாப்பிள்ளையை அணைத்துக் கொண்டார், கங்காதரன்.

மேலும்… "நீங்கள் மட்டும் அவளைத் திருமணம் செய்யவில்லை என்றால் அவள் நிலையை யோசியுங்கள் மாப்பிள்ளை… நீங்கள் என்னிடம் உண்மையைச் சொன்னதும்... அவள் நல்லதுக்குத் தான் மாப்பிள்ளை… நீங்கள் அவளுக்குக் கணவனாக வரவேண்டுமென விதி இருக்கிறது. இல்லையென்றால் திருமணம் என்பது அவள் வாழ்க்கையில் கேள்வி குறியாகிருக்கும்" என்று எதிலும் நம்மையைப் பார்த்தார் கங்காதரன்.

' முதலில் கோபம்.. பின் காதல்' என்று அவளைக் கட்டினேன்... ஆனால் அவள் ஏன் இப்படித் தன் வாழ்க்கையைச் சிக்கலாக்கும் ஒரு முடிவினை எடுத்தாள் என்ற கேள்வியும் அதியமான் மனதில் உண்டானது..


அதற்கான பதில் அவனுக்கு அவள் வாய் மொழியில் கேட்கும் போது என்ன மாதிரியான மனநிலை இருப்பான் என்று கடந்து சென்று கொண்டு இருக்கும் இந்தக் காலமும் அவள் காதலும் சொல்லும்.


தங்கள் மருமகன் வந்து சென்றதில் இருந்து எந்த வேலையும் செய்யாமல் அப்படியே அமர்ந்து இருந்தனர் கங்காதரன் தம்பதியர்.

எவ்வளவு பெரிய பழியைத் தன் மேல் போட்டுக் கொண்டாள் தாரா.
தாரிகாவினால் எப்படிப் பெற்ற பிள்ளையை விட்டுப் பிரிந்து இருக்க முடிகிறது.. அதுவும் கண் முன் நடமாடும் போது தாய்மையை ஊற்றெடுக்காதா... பெற்ற பிள்ளையைக் காணமல் மாற்றான் தாய் மனப்பான்மையில் நடமாடுமளவுக்குச் சுயநலம் நிறைந்தவளா!

தன் இன்னொரு மகள்…‌ இருவரையும் ஒரே நேரத்தில் ஒன்றாகத் தானே‌‌ மடிச்சுமந்தேன், அதில் இப்படி ஒரு வேற்றுமையா என்று எண்ணி எண்ணிக் கண்ணீர் விட்டாள் புனிதா.

தாராவைக் கடைசியாகத் துணிக்கடையில் வைத்து அவகணித்த காட்சிக் கண் முன் தோன்றி அவரைக் கொன்றது.

இதை வெளியே சொல்லாதீங்க என்று தன் கையைக் கட்டிப் போட்ட, தன் மாப்பிள்ளையின் வார்த்தைகளைத் தட்ட முடியாமல் இருந்தனர் இருவரும்.


இதெல்லாம் மகேந்திரன் மற்றும் அவன் தாயிக்கும் தெரியும் என்றது நினைவில் வந்த போது அன்றே தங்கம் கூறிய வார்த்தைகள்லகாதில் எதிரொலித்தது.

எல்லாம் மாறும் போது வருத்த பட நேரும் என்று கூறியதும் எல்லாம் நினைவில் வந்து புனிதாவைப் படாகப் படுத்தியது. அதுவும் தனது பிள்ளைக்குத் தண்டனைத் தருவதாகச் சிறிய குழந்தையைக் கஷ்டபடுதியது நினைத்து 'ஆண்டவா' இந்த ஜென்மத்தில் என் பாவத்திற்கு விமோசனம் இல்லையே.. குழந்தையிடம் தெய்வம் வாழும் சொல்லுவாங்க அப்படி இருந்தும் நான் குழந்தை வேதனைப் படுத்தி விட்டேனே என்று ஒரு மூச்சு அழுதுத் தீர்த்தார் புனிதா.

இப்போதே தாராவைப் பார்க்க வேண்டும் என்று மனதில் அவருக்கு ஆசைத் தோன்றியது... தன் கணவனிடத்து வந்தாள் புனிதா.

"என்னங்க"… என்று தயங்கி நின்றாள் அவர் மனைவி.

"என்ன புனி.. என்ன சொல்லு"…


"நாம் தாராவைப் போய்ப் பார்க்கலாமங்க எனக்கு ரொம்பக் கஷ்டமாக இருக்கிறது…
அவளை நேரில் பார்த்து மன்னிப்புக் கேட்கணும்" என்றாள் புனிதா.

"அது தான் தெளிவாக மாப்பிள்ளைச் சொன்னாரே உனக்குப் புரியவில்லையா" என்று கேள்விக் கேட்டார், கங்காதரன்.

கணவன் சொன்னதைக் கேட்டதும் ஓ என்று அழுக ஆரம்பித்தாள் புனிதா…

"என்னடி, என்ன ஆச்சு... விடு நம்‌மபொண்ணை நம்பி இருக்கணும்… ‌ ஆனாலும் அவள் நம்மிடம் இதெல்லாம் மறைத்தது தவறு தான் புனிதா… அவள் தவறு செய்யவில்லை என்றாலும் தவறுக்குத் துணைப் போயிருக்கா" என்று கங்காதரன் கூறினார்.

புரியுதுங்க… ஆனால் என்‌‌ மனம்‌ ஆறவே மாட்டேங்கிறது… எப்படி இவ்வளவு நடந்த பின்னும் எதுவும் தெரியாத போலத் தாரிகாவினால் நடமாட முடியுது…தன்னால் தான் தாராவிற்கு இவ்வளவு கஷ்டம்.. எங்கையாவது அவள் மேல் தவறில்லை சொல்லி இருக்கலாம் தானே என்று‌ ஆதங்கத்தைக் கணவனிடம் பகிரிந்தார் புனிதா.

"எல்லாம் தைரியமாகச் செய்தி இருக்கிறாள்… அவள் நடத்தையே அதற்குச் சான்று.. அவளிடம் இருந்து இதைத் தான் எதிர் பார்க்க முடியும் புனி... விடு நம் குடும்ப மானம் பறக்க விடாமல் ஒர் அளவிற்குப் பாதுக்காக்கப் பட்டு இருக்கிறது..

அதற்குக் காரணம் தாரா … ஆனால் மாப்பிள்ளைத் தாராவைத் திருமணம் செய்ததால் தான் நம் மானம் காப்பற்றப்பட்டது" என்று தெளிவாகக் கங்காதரன் கூறினார்.

அவருக்கு இதெல்லாம் தெரியாமல் போயிருந்தால்…‌ அவள் அவரைக் கல்யாணம் பண்ண மாட்டேன் என்று‌ச் சொல்லியும், அதெல்லாம் மனதில் வைத்துக் கொள்ளாமல் தாராவையே திருமணம் செய்து இருக்காரு…‌ அதற்கு அவருக்குத் தான் நாம் கடமைப் பட்டு இருக்கோம் புனிதா‌" என்று கங்காதரன் கூறினார்.

"இதெல்லாம் இப்போது எதுவும் தெரிந்த போலக் காட்டிக் கொள்ள வேண்டாம்... தாரிகா, திருமணம் நல்லபடியாக நடந்து முடியட்டும். எல்லாம் விதி நினைத்துக் கொள்ள வேண்டியது தான் என்ன செய்ய" என்று‌‌ ஒரு பெருமூச்சு இழுத்து விட்டவர், "நான் வெளியே போயிட்டு வரேன்" என்று‌ அவர் வந்தது தங்கத்தின் வீட்டிற்குத் தான்.

கணவனின் வார்த்தைகளை எல்லாம் கேட்டதும் புனிதாவிற்கு என்ன இருந்த போதும் தாராவை நான் அவமானப் படுத்தி இருக்கக் கூடாது என்று மனதில் வேதனைப் பட்டார்.

தெளிவாக இருக்கும் பெண் சட்டெனத் தவறு செய்வாள் என்று எப்படி நான் நம்பினேன்.. அவளை நம்பாமல் கேள்விக் கேட்டு இருந்தாலே உண்மையை உளறியிருப்பாளே என்று நினைத்துக் கண்ணீர் விட்டார்.

அன்றைய தினம் அவருக்கு வேதனையும் புலம்பலுமாகச் சென்றது.

தங்கையின் வீட்டிற்கு வந்த கங்காதரன் அங்கே உணவு உண்டுக்கொண்டிருக்கும் மகேந்திரனைப் பார்த்தார் கங்காதரன்.

"என்ன மாமா என்னாச்சு.. எதாவது பிரச்சனையா" என்று கேட்டான் அவர் முகத்தைப் பார்த்து.

"இல்லை மாப்பிள்ளை"… என்றவர் அதியமான் வந்ததும் தன்னிடம் கூறியதெல்லாம் ஒன்று‌விடாமல் சொன்னவர் நீயாவது சொல்லி இருக்கலாம் மகி என்றார்.

"எப்படி மாமா சொல்ல… எனக்குத் தெரிய வரும் போது எல்லாம் கைவிட்டுப் போயிருந்தது… அது மட்டும் இல்லாமல் தாரா எல்லாம் தெளிவாக யோசிச்சு இருந்தாள். அவளுக்கு உதவுவதை விட வேற‌வழி எனக்குத் தெரியவில்லை…

அது மட்டும் இல்லை... கணவனோடு இருக்கிறாள் தாரா என்று அறிந்ததும் உங்களுக்கு என்ன ஆச்சு… இதே கைப்பிள்ளையோடு, கணவன் யாரென்று தெரியாமல் தனியாக இருக்கிறாள் என்று அறிந்தால் உங்க நிலைமையை யோசிங்க" என்றான் மகேந்திரன்.

"இதெல்லாம் நடக்கக் கூடாது என்று தான் நானும் அவளுக்கு உதவினேன், மற்றப்படி உங்களை‌ ஏமாற்ற வேண்டும் என்று நினைக்கவில்லை மாமா" என்றான் மகேந்திரன்.

"பிள்ளையைக் கையில் வைத்துக் கொண்டு தாரா, கண்டிப்பாகத் திருமணம் செய்து இருக்க மாட்டாள் என்று, அவள் பேசிய பேச்சிலேயே தெரிந்தது மாமா" என்று ஆணித்தரமாகக் கூறினான் மகேந்திரன்.
தாரா ஏன் திருமணம் வாழ்க்கையைப் பற்றி யோசிக்காமல் இந்த முடிவை எடுத்தாள் என்பது அதியமான் மனதில் நெருடலை உண்டாக்கி இருந்தது.

ஏன் என்ற கேள்விக்குப் பல வகையிலும் சிந்தித்துப் பார்த்தான்... விடைதான் கிடைக்க வில்லை.

தன் பெற்றவர்களிடம் எல்லா உண்மைகளையும் கூறிவிட்டான் தன் கணவன் என்று‌ அறியவில்லை தாராவிற்கு.

வேகம் என்பது கட்டுக்குள் இருக்கவேண்டும்... காலத்தின் வேகம் மட்டும் அதில் விதி விலக்கு…

இதோ… இரு சோடிகளின் திருமண நாளும் வந்து விட்டது.

காதலிக்கும் போது பல கனவுகளைக் கண்டு கட்டுண்டு இருந்த தாரிகா மற்றும் சதீஷ் சோடிக்குத் திருமணம் நெருங்கி வந்தது.

சதீஷ் தன் வாழ்க்கையை வசதி வாய்ப்புகள் நிறைந்த வாழ்க்கையைத் தாரிகாவிற்குத் தருவதற்கு இரவும் பகலுமாக உழைத்தான்.நிற்க‌நேரமில்லாமல் ஓடினான் தொழிலும் புதிது என்பதால் அவனுக்கு இருபத்தி நான்கு மணி நேரம் ஒரு நாளில் போதவில்லை ‌…

அதனால் தாரிகாவுடன் பேசவும் கல்யாணக் கனவுகளைப் பகிரவும் நேரமில்லாமல் அவன் இருக்க அதெல்லாம் அவளுக்கு மனதில் ஓரம் மெல்லிய துன்பத்தின் ரீங்காரம் இசைத்துக் கொண்டு இருந்தது.


தன் இரண்டாவது மகனின் கல்யாணம் மிகவும் சிறப்பாக நடத்தத் திட்டமிட்டு இருந்தார் சாந்தி…

இதனால் திருமணம் வேலைகள் நிறைய வரிசைக் கட்டி நிற்கவும் திருமணம் நடத்தும் அமைப்பிடம் அந்த வேலை ஒப்படைத்தாள் தாரா…

ஒரு கல்யாணம் என்று எடுத்தால் உணவு, மண்டபம் அலங்காரம், பெண் அழைப்பு, புகைப்படங்கள் எடுப்பது என்று திருமணம் ஆரம்ப முதல் இறுதி வரை எல்லாமே அவர்கள் ஏற்பாடு செய்து தருவர். நமக்கு அலைச்சல் இல்லாமல் இருந்தது…

தன் மருமகளின் ஆலோசனைச் சிறந்ததாக இருந்தபோதும், அதை‌‌ப் பாராட்டிப் பேச வேண்டும் என்றெல்லாம் இல்லாமல் அவள் கடமை அதுவென்று கடந்து சென்றார் அவள் மாமியார்.
யாரைப் பற்றியும் யோசிக்காமல் தன் கடமையைச் சரி வர‌ச்செய்தாள்‌, தாரா…

திருமண நாளும் வந்தது…

காலை நேரம் பொன்னிற வானோடு பயணம் தொடங்கியது…

தாரிகா, தன்னை அலங்கரிக்க அலகு நிலையம் இருந்து ஆட்கள் வர வைத்திருந்தாள்.

நளினி அதெல்லாம் வேண்டாம் என்றதால் அவளுக்குத் தாராதான் எல்லாம் அலங்காரம் செய்து கொண்டு இருந்தாள்.


இரண்டு திருமணம் ஒரே நாளில் நடப்பதால் இரண்டு குடும்பங்கள் பொதுவான இடத்தில் வைத்திருந்தனர் கல்யாணம்.


கல்யாணம் வேலைக்கு நடுவே தன் மகள் தாரா விடம் பேச முயன்றாள் புனிதா…

அதியமான் வீட்டில் மூத்த மருமகள் என்ற பொறுப்பு அவளை நிற்க விடாமல் ஒட வைத்துக் கொண்டு இருந்தது.

பிள்ளையோ அழுதுகொண்டே இருந்தான் அவனை அதியமான் தான் வைத்து இருந்தான்.

அவளிடம் பேச நேரம் பார்த்துக் கொண்டு இருத்த புனிதாவிற்கு மனதில் அவமானமாகப் இருந்தது.

எப்படி அவள் முகம் பார்த்துப் பேச என்ற‌த் தயக்கமும் இருந்தது.

அந்த ஊரே அசந்து போனது தாரிகாவின் திருமணம் பார்த்து.

மாப்பிள்ளைப் பெரிய இடம் போல என்று பேசிக் கொண்டனர்.


மகேந்திரன் மற்றும் சதீஷ் மணமகன் கோலத்தில் அமர்ந்துப் புரோகிதர்ச் சொல்லும் மந்திரம் உச்சரித்துக் கொண்டு இருந்தனர்…

அவர்களைக் காக்க வைக்காமல் வந்தனர் மணப்பெண் இருவரும்…

நல்ல நேரம் முடிவதற்குள் இருவரும் தங்கள் துணையின் கழுத்தில் மங்கள நாண் பூட்டி அவர்களைத் தங்கள் சொந்த மாக்கிக் கொண்டனர். திருமண முடிந்ததும் பாலும் பழமும் உண்டு வேகமாகத் தங்கள் ஊரிற்குப் புறப்பட்டனர் தாரிகா மற்றும் சதீஷ் தம்பதியர்.


அவர்களை வரவேற்று ஆலம் கரைத்து உள்ளே அழைத்தாள் தாரா…

தாரியாகத் திருமணத்திற்குத் தங்கள் திருமணம் இடையே ஆறு‌ என்ன‌அதற்கு மேலே வித்தியாசம் இருந்ததைக் கண்டு சிரித்தான் அதியமான்.

தன் தாயின் ஒரு தலைப் பட்சமாக இருக்கும் இந்தப் போக்கு ‌மாற‌வேண்டும் என்று அவன் எதிர் பார்க்கவில்லை…

சில விஷயங்கள் நடப்பது நல்லதிற்கு என்று நினைத்தான் அவன்.

அன்றைய இரவில் சாந்தி முகூர்த்திற்கு … தாரிகாவை அலங்காரம் செய்து விட்டாள் தாரா…

அவள் தலையில் பூச்சூடியபடி "தாரிகா உன் வீட்டுக்காருக்கு அமரன் பத்தித் தெரியுமாடி" என்று கேட்டாள்.

"இல்லை தாரா... அவருக்கு நினைவில் இருக்கா என்றே எனக்குத் தெரியவில்லை... அவர் நளினியைத் தெரிந்துப்போல் காட்டிக்கொள்ள வில்லை... இதெல்லாம் பார்க்கும் போது எனக்கு ரொம்பக் குழப்பமாக இருக்கு... நான் வேண்டுமென்றால் அவரிடம் பேசட்டுமா? தாரா" என்றுகேட்டாள் தாரிகா.

"இல்லை வேண்டாம் ... கண்டிப்பாக அவருக்குத் தெரியவரும் எதிர்காலத்தில்... உங்கள் காதல் வாழ்க்கையில் இன்றிய நாளின் சந்தோஷத்தைக் கெடுக்க வேண்டாம்... தேவையில்லாமல் உன் வாழ்க்கையைக் காம்பிலிகேட் பண்ணாதே... எல்லாம் நல்லதுக்கே என்று நினைத்துச் சந்தோஷமாகப் புதிய வாழ்க்கையைத் தொடங்கு" என்று கட்டி அணைத்து அறிவுரைக் கூறினாள் தாரா.

அவளிடம் கையில் பால் சொம்புக் கொடுத்து முதல் இரவு அறைக்குள் அனுப்பி வைத்துப் பெரிய மருமகளின் கடமையை முடித்தாள் தாரா.

தன் மனைவி வரும் வரை ஹாலில் இருக்கும் சோஃபாவில் அமர்ந்து உறங்கும் மகனைத் தட்டிக் கொடுத்துக் கொண்டு இரவில் கையில் பையனோடு உறங்காமல் காத்திருந்தான் அதியமான்.

தனக்காகக் காத்திருக்கும் கணவனிடம் வந்தவள் அவனிடம் இருந்து மகனை எடுக்கக் குனியும் போது அவளைப் பார்த்து "உன்னோட கடமை எல்லாம் முடிந்தது என்றால், நாம் கிளம்பலாமா? தாரா" என்றான் அதியமான்.

வீட்டிற்குக் கிளம்பலாம் என்ற அதியமானை அதிர்ச்சியோடு பார்த்தாள் தாரா.

" என்ன பாக்குற அதுதான் எல்லாம் முடிஞ்சது இல்ல... அம்மா தூங்கியிருப்பாங்க, உமாவிடம் போய்ச் சொல்லிக்கொண்டு கிளம்பி வா" என்றான் உத்தரவோடு.
இப்போது சரியா என்று கேட்டாள் கணவனிடம்,

" எல்லாம் சரிதான், இந்த லிமிட் இருக்கிறது தான், உனக்கு நல்லது" என்றவன் உமா அக்காவை அழைத்தான்.

"சரி அப்போ நாங்கள் கிளம்புறோம் அக்கா, அம்மா டயர்டில் தூங்கிட்டு இருப்பாங்கள், காலையில அவங்களிடம் சொல்லிருங்க, முடிந்தால் நாளைக்கு நாங்கள் வரோம்" என்று விடைபெற்றான் அதியமான் தன் மனைவியோடு.

கடமைகளை எல்லாம் செய்தவன் அங்கே உரிமையோடு இருக்கத் தயங்கினான்.

தன் மனைவிக்கு மரியாதைக் கிடைக்காத இடம்... தன் வீடான போதும் அதைத் த
விர்த்தான்.

அதே மாதிரி அவளுக்காக எல்லாம் பார்த்துப் பார்த்துச் செய்யும் அவன், கடந்த காலத்தில் செய்தச் சிறிய தவறு… எப்படி எல்லாம் அவனைக் காதல் வாழ்க்கையை ஆட்டிப்படைக்கும் என்பது இனிவரும் நாட்களில் தெரியும்.

தொடரும்.
 
Top