எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா - 18

subasini

Moderator
மனம் - 18


ஓடும் மேகங்கள் போல் அங்கும் இங்கும் பாய்ந்து கொண்டே இருக்கிறது… அவள் மனம்

எங்கும் எதிலும் லயிக்காமல் இந்த வாழ்க்கையில் அவள் காதல் படும் பாடு…

திருமணம் முடிவு செய்யப்பட்டது என்று அறிந்துப் பின்னும் சதீஷ் தன்னிடம் பேசும் விதத்தில் பல மாற்றங்களை உணர்ந்தாள் தாரிகா…

ஏன் தன்னை அழைக்க வில்லை என்று யோசித்தாள்.. ஆனால் சதீஷோ…நிற்க நேரமில்லாமல் ஓடிக்கொண்டே இருந்தான்.

அண்ணன் தொழில் தன் கையில் வந்த நிமிடங்கள் என்னமோ அவனுக்குப் பெரிய சாதனைப் படைத்த உணர்வு வந்த போதும் இந்தத் தொழிலில் தனக்கான இடத்தைத் தக்க வைக்க அவனால் பல விதமாகப் போராட வேண்டி இருந்தது.

தொழில் துறையில் ஓடிக் கொண்டிருக்கும் அவனுக்குக் காதலில் கவனம் செலுத்த முடியவில்லை.

அவளுக்கு மனதில் பல குழப்பங்களை உண்டாக்கியது... 'சதீஷ் இப்படி இல்லை, அவனுக்கு என்ன ஆயிற்று 'என்று பல கேள்விகள் மனதில் தோன்றியது.
அவன் அழைக்கவில்லை என்றால் என்ன நான் அழைத்துப் பேசுகிறேன் என்று அவனுக்கு அழைத்துக் காத்திருந்தாள்…

“ஹலோ.. சொல்லு, தாரிகா” என்றவன் குரலில் மருந்துக்கும் ஆர்வம் இல்லை.. அவளிடம் பேசுவதற்கு… உரையாடலை முடிக்கும் வேகம் அவனிடம் இருந்தது.

“சாப்டீங்களா… என்ன செய்றீங்க… நம்ம‌ மேரேஜ் கார்ட் டிசைன் பார்த்தீர்களா… நான் செலக்ட் பண்ணினது உங்களுக்குப் பிடிச்சுதா” என்று கேட்டாள்.

“எனக்கு அதற்கெல்லாம் நேரமில்லை தாரிகா நான் அப்பறம் கூப்பிடுறேன்” என்று கட் செய்தவன் அதற்குப் பின்

அழைப்பை ஏற்கவும் இல்லை , அதற்குப் பின் வந்த நாட்களில் அவளுக்குத் திரும்ப அழைக்கவும் இல்லை. அந்த அளவிற்கு அவனைப் பிஸியாக வைத்திருந்தது வேலை.


அதன் பின்னர் அவள் சாந்தியிடம் தான் பேசினாள்.

அவர் தன் வருங்கால மருமகளிடம் அடிக்கடிப் பேசுவார்.. அதுவும் தன்னைத் தேடி, தாரா வீட்டிற்கு வரும் நாட்களில் அவளை வேதனைப் படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் அவர் செய்வதெல்லாம் தாரிகாவிற்குத் தன் மாமியாருக்கு, தன் மேல் பாசம் என்று நினைத்துக் கொண்டாள்.

திருமணம் நாளும் நெருங்கியது…
அனைவருக்கும் துணி எடுக்கும் நிகழ்வு வந்தது.

சாந்தி இரண்டாவது மருமகளுக்குத் துணி எடுக்க உயர்ந்த ஜவுளிக் கடையைத் தேர்ந்தெடுத்தவர் அங்கே அனைவரையும் வரசொல்லி இருந்தார்.

எல்லோரும் வந்திருந்தனர்… அதியமான் மட்டும் வர முடியாமல் மீட்டிங்கில் மாட்டிக்கொண்டான் அதனால் தனக்குச் சேர்த்தித் தாராவை எடுக்கச் சொல்லி இருந்தான்.


ஜவுளிக் கடைக்கு வந்த தாராவை ஆர்ப்பாட்டமாக வரவேற்றாள் நளினி…

தாரிகாவோ… வா, தாரா என்றவள் அதற்கு மேல் அவளிடம் நிற்காமல் தன் மாமியாரின் அருகில் வந்து நின்றுக் கொண்டாள்.

தாராவிற்கு மனதில் சங்கடமாகியது ஏன் இப்படிப் பண்ணுகிறாள் என்று புரியவில்லை.

புனிதாவோ தன் மகளைத் தவிர்க்க வேண்டும் என்று வேண்டுமென நடந்து கொண்டார்.

"அம்மா… நல்லா இருக்கீங்களா… அப்பா எங்கே அம்மா…நல்லா இருக்காரா" என்று அவள் கேட்டக் கேள்விக்குப் பதில் அளிக்க மனமில்லாமல் சாந்தியைப் பார்த்து "வாங்க, சம்பந்தி" என்று அவரை நோக்கி அவளைக் கடந்து சென்றார்ப் புனிதா.

பெற்றவளின் இந்தச் செயலால் தன் புகுந்த வீட்டார் முன் அவமானப் பட்டு நின்றாள் தாரா.

இதைப் பார்த்த, தங்கம் மனதில் புனிதாவின் மேல் கடுங்கோபம் வந்தது.

தாராவிடம் வந்தவர் “வா, தாரா… எங்கே உன் வீட்டுக்காரர்… அவர் வரவில்லையா?" என்று கேட்டவர் அவளிடம் இருந்து அமரனை வாங்கிக் கொஞ்சினார்.

இரண்டு வீட்டுப் பக்கமும் இருக்கும் அவன் பாட்டிகளுக்கு அவனை வேண்டாம் என்ற மனநிலை அவளுக்குப் புரிந்தது.

குழந்தையிடம் அவர்கள் காட்டும் இந்தப் பாராமுகம் தங்கத்துக்குப் பிடிக்கவில்லை. ஆனால் ஒர் எல்லைக்கு மேல் கடந்து சென்று அவர்களுக்கு அறிவுரை வழங்கும் உரிமை அவருக்கு இல்லையே அதனால் விட்டு விட்டார்.


இதற்கெல்லாம் காலம் பதில் சொல்லும் என்று நினைத்தார்.

தாராவை அவகணிக்கும் அவள் தாயைப்பிடித்திருந்தது சாந்தியம்மாவிற்கு.

இருவரும் நன்றாகப் பேசிக்கொண்டனர் இருவருமே தாராவை ஒரு பொருட்டாக மதித்துப் பேசவில்லை.அவள்‌பேசிய போதும் காது கேட்காதது போல் நடந்து கொண்டனர்.

இந்தச் சூழ்நிலையை எப்படிக் கையாள என்று நிஜமாகவே தெரியாமல்
கண் கலங்கத் தவிப்போடு நின்றிருந்தாள் துணி எதுவும் பார்க்காமல்.

தாரிகாவோ சதீஷோடு தன் திருமணம் புடவையைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தாள்.

"வேகமாகச் செலக்ட் பண்ணுத் தாரிகா… எனக்கு முக்கியமான வேலை இருக்கு… இன்னைக்கு நல்ல முகூர்த்தம் என்று அம்மா சொன்னாங்க, அது தான் வந்திருக்கேன் என்‌ நேரத்தை வேஸ்ட் பண்ணாதே" என்றான் சதீஷ்.


தன்னவனின் இந்த வார்த்தைகள் எல்லாம் கேட்டதும் தாரிகாவிற்கு மனதில் இருந்த காதல் கனவுகள் எல்லாம் சட‌சடவென விழுந்து நொறுங்கியது. அதன் பின் அவளுக்குப் பிடித்த வண்ணத்தில் மாமியாரின் ஆசைக்கு ஏற்ப விலை உயர்ந்தத் தரத்தில் பட்டுப் புடவை எடுத்தாள்.

சதீஷிற்குப் பட்டுச் சட்டை மற்றும் வேஷ்டி எடுத்தனர் நல்ல நேரம் முடிவதற்குள்.

எல்லாம் அழகாக இருந்தது… ஆனால் ஆனந்தம் மனதில் இல்லை தாரிகாவிற்கு.

நளினியோ… மகேந்திரன் மற்றும் தாராவோடு கடையையே திருப்பிப் போட்டுக் கொண்டு இருந்தாள்… அதுவும் தாராவும் மகேந்திரனும் அவளைக் கேலிச் செய்து கொண்டும் விளையாடிக் கொண்டுமே தங்கள் துணிகளைத் தேர்ந்தெடுத்தனர்…

அவர்கள் எடுத்த துணியின் விலை, தாரிகாவோடு ஒப்பிடும்போது குறைவாக இருந்த போதும் அந்தத் தேர்ந்தெடுக்கும் நிகழ்வில் ஒர் உயிர்ப்பு இருந்தது.

தானும் அவர்களைத் தன்னோடு அழைத்து வந்து இதே போன்று தன் புடவையை வாங்கும் வைபோகத்தை அழகாக மாற்றி இருக்க முடியும் ஆனால் அவளின் சுயநலமும் பயமும் அதெல்லாம் தவிர்த்தது.

நளினி எல்லாம் எடுத்ததும் நேராகத் தாராவிடம் “நீ‌ எடுக்க வில்லையா‌? நீ என்ன எடுக்கப் போகிறாய் ? ” என்று தாராவிடம் கேட்டாள்.

"எடுக்கணும் டி அது தான் பார்க்கிறேன்" என்று அவள் சொல்லிக் கொண்டு இருக்கும்போதே அதியமான் அழைத்தான்…

வீடியோ காலில் வந்திருந்தான்.
இதைப் பார்த்த நளினியோ… “ஓஹோ கதை அப்படிப் போகுதா என்றவள் நீ‌ நடந்துடி” என்று மகேந்திரன் அருகில் சென்று அவன் காதில் கிசுக்கிசுத்தாள்…

அவள் அருகில் வேகமாக வந்தவன் அவள் போனின் வீடியோ காலில் படும் படி நின்று கொண்டு “இதை எடுத்துக்கோ தாரா… உனக்கு ரொம்ப அழகாக இருக்கும்” என்று அதியமானின் இரத்த அழுத்தத்தை எகிற விட்டான் மகேந்திரன்.

அவனின் செயலில் தன்னிடம் விளையாடும் அவனை முறைத்தான் அதியமான்.

அதியமான் முகத்தைப் பார்த்த மகேந்திரன்… அவன் முகத்தில் எள்ளும் கொள்ளும் வெடிக்கக் கண்டான் ‌‌.

"என்ன அதியமான்… இது தாராவிற்கு அழகாக இருக்கும் தானே" என்று கேட்கவும் செய்தான்…

அந்நேரம் கணவனின் முகத்தைப் பார்த்தவளுக்குப் புரிந்தது அவன் கோபத்தின் காரணம்.

"வேகமாக மாமா சும்மா இருங்க… அவரை ஏன் வம்பிழுக்கறீங்க" என்று மகேந்திரனுக்கு மட்டும் கேட்குமாறுச் சொன்னவள் நளினியைப் பார்த்து "ப்ளீஸ் டி" என்று கேட்கவும்..

"அது" என்றபடி "நீங்கள் வாங்க" என்று மகேந்திரனை அழைத்தாள்.


இந்தக் காதலர்களின் விளையாட்டும் தாராவின் புன்னகை முகமும் கண்டதும் தாரிகா தன் அருகில் இருக்கும் சதீஷ் பார்த்தாள்.

அவன் தன் அலைபேசியில் பிஸியாக இருந்தான்.
மீண்டும் தாராவைப் பார்த்தாள்.

தாராவோ தன் அலைபேசியில் கணவனிடம் என்ன வண்ணத்தில் புடவை எடுக்க என்று கேட்டுக் கொண்டு இருந்தாள்.

அவள் என்ன சொன்னாரோ... தாராவின் முகம் வெட்கத்தில் சிவந்தது…
பின் அவள் புடவையின் வண்ணத்தில் அவனுக்குச் சட்டை எடுத்தாள் அதே நிறத்தில் அமரனுக்கும் எடுத்தாள்.

இதெல்லாம் பார்த்தவளுக்கு மனதில் லேசாகப் பொறாமை எட்டிப் பார்த்தது.


ஆனால் என் திருமணம் காதல் கல்யாணம்... திருமணமாகட்டும் இதைவிட அழகாக வாழுவேன் என்று மனதில் நினைத்தாள்.

புடவை எடுக்கும் வைபவம் முடிந்ததும் அனைவரும் உணவு உண்டு, தங்கள் வீட்டிற்குத் திரும்பினர்.

தாராவோ தன் குடும்பத்தோடு அதியமானின் வீட்டிற்கு வந்து... சிறிது நேரம் இருந்து மேற்கொண்டு என்ன செய்ய வேண்டும் என்று மருமகளாகக் கடமையைச் செய்ய முனைந்தாள்… அவளின் வரவே பிடிக்காத சாந்தி… உணவு விடுதியில் இருந்து சதீஷோடு வேகமாக அனைவரிடமும் விடைபெற்று அவளை அழைத்துச் செல்லாமல் விட்டு விட்டார்.

புனிதாவோ தாரிகாவிடம் சொல்லி வேகமாகக் வாடகைக் காரைப் புக் பண்ணச் சொல்லி அவர்களும் தனியாக வீட்டிற்குத் திரும்பினர்…

தாராவிடம் எதுவும் கேட்கவில்லை வருகிறாயா என்று… இதெதுவும் கவனிக்கும் நிலையில் தாராவும் இல்லை… அவள் எதிர் பார்க்கவும் இல்லை.

மகேந்திரனிடம் தன்னைத் தங்கள் அப்பார்ட்மெண்டில் விடும் படிக் கேட்டுக் கொண்டவள்… “நாளைக்கு நான் அவர் வீட்டிற்குச் சென்று இனி வரும் நாட்களில் முடிக்க வேண்டிய வேலையைப் பார்த்துக் கொள்கிறேன் மாமா” என்றாள் தாரா.

"புரியுது … இருந்தாலும் இப்படிக் கைப்புள்ளையோட இருக்கும் உன்னை விட்டுட்டுப் போவாங்க… என்ன இருந்தாலும் அவங்களோட பேரன் தானே அமரன்... அந்தப் பாசம் கூடவா இருக்காது" என்று ஆதங்கத்தோடு கேட்டான் மகேந்திரன்.

"எல்லாம் சரி ஆகும் மாமா என் வீட்டுக்காரர், சரி பண்ணுவாரு" என்றாள் தாரா…

"ஆமா ஆமா, பண்ணுவான்" என்று மனதில் நினைத்தவன் அதியமானிடம் பேச வேண்டும் என்று முடிவுச் செய்தான்.

வேலையை முடித்து விட்டுத் தாராவிற்கு அழைத்தனின் அழைப்பை ஏற்றாள் தாரா…

சொல்லுங்க…

ம்ம் இல்லை…

நானா… மாமாவோட வரேன்…

இல்லை என்ற பதிலில் அழுகையை முழுங்கினாளோ…
மனைவியிடம் என் அம்மா உடன் தான் வருகிறாயா என்ற முதல் கேள்விக்கு இல்லை என்றதும் அப்பறம் யாரோடு வரீங்க என்ற கேள்விக்கு நானா.. மாமாவோட என்று கூறினாள்.
ஏன் உன் அம்மா என்ற அவன் கேள்விக்கு அழகையைக் கட்டுப் படுத்தும் மனைவியின் உணர்வுகளை உணர்ந்தவன்…

சரி மகேந்திரனடம் போனைக் கொடு என்றான் அதியமான்.
முகத்தில் சிந்தனை ரேகைகள் படிய

ஃபோனை வாங்கியவன் "சொல்லுங்க ஆதி…
எங்க வந்துட்டு இருக்கீங்க… நளினியும் தங்கம் அம்மாவும் எங்கே" என்று கேட்ட அவன் அக்கறையில் மனம் குளிர்ந்தது மகேந்திரனுக்கு… அதியமான் பாசத்தில்
"உன்னோட தங்கையும் என் அம்மாவையும் பத்திரமாக எங்களோடு தான் காரில் வராங்க… நாங்கள் தாராவைக் கூட்டிக் கொண்டு வந்துட்டு இருக்கோம்" என்ற மகேந்திரன் பதிலில் சிரித்தான் அதியமான்.

"சரி நீங்கள் இருக்கும் பகுதிக்கு அருகில் தான் இருக்கேன், இதோ இப்பொழுதே வருகிறேன்" என்றான் அதியமான்.

பதினைந்து நிமிடத்தில் வந்து சேர்ந்தான் அவர்கள் இருக்கும் இடத்திற்கு.

அவன் வேகத்தில் மனதில் பயம் உண்டானது தங்கத்திற்கு அதை அவனிடம் மறைக்காமல் கூறிக் கண்டிக்கவும் செய்தார். அம்மாவாக. அந்தப் பாசம் அவனுக்குப் பிடித்து இருந்தது.

அவர்களிடம் சிறிது நேரம் பேசினான். என்ன எல்லாம் வாங்கினார்கள் என்ற கேட்டு எல்லாம் தெரிந்துக்கொண்டான்.

தங்கத்திடம் பேசிக்கொண்டு இருந்த போதும் தன் மனைவியின் முகம் பார்த்துக் கொண்டு தான் இருந்தான்.

அதில் இருக்கும் மெல்லிய சோகம் எதனால் என்று அறிய வேண்டி இருந்தது.. எப்படியும் சொல்ல மாட்டாள் என்று தெரிந்தவன் மெல்ல நளினியின் பேச்சுக் கொடுத்து எல்லாம் தெரிந்து கொண்டான்.


தன் வீட்டிற்குச் செல்லும் போதும் அங்கே என்ன நடந்தது என்று உமாவிடம் கேட்டுத் தெரிந்துக் கொள்வான்… இது வரை மாமியார் அவளை அவமானப் படுத்தியதை அவனிடம் பகிர்ந்ததில்லை தாரா... தன்னால் மேலும் தாய் மற்றும் மகனுக்குப் பிளவு வருவதை‌விரும்பவில்லை அவள்.

"அண்ணா.. தவறாக நினைத்து விடாதீர்கள்.. உங்க அம்மாவிற்கு அவள் பிடிக்காத மருமகளாக இருக்கட்டும்.. ஆனால் எங்கள் முன்னால் இப்படி அவளை அசிங்கப்படுத்தி இருக்க வேண்டாம்… அவள் இதெல்லாம் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று நன்றாகத் தெரிகிறது… இதில் இந்தத் தாரிகா அவளை அவாய்ட் பண்ணறது ஏன் தெரியவில்லை அண்ணா… எனக்கு அவ்வளவு கோபம் வருது.. அப்பறம் குடும்பத்தில் நம்மால் ஒரு பிரச்சினை வரக்கூடாது… என் வீட்டுக்காரரே சும்மா தான் இருக்காரு அப்பறம் நான் எப்படிப் போய்க் கேட்க" என்று அவனிடம் ஆதங்கப்பட்டாள் நளினி.

"புரியுது நளினி.. உன் தோழி இதெல்லாம் கேட்டால் கூடப் பகிராமல் எல்லாம் மனதில் வைத்துக் கஷ்டப்படுவாள்" என்று கூறியவன்...

"இதை எப்படிச் சரி செய்வது என்று எனக்குத் தெரியும், விடு நான் பார்த்துக் கொள்கிறேன்" என்று கூறினான் அதியமான்.
நேராகத் தாராவிடம் வந்தவன் "சரி போலாமா? தாரா... சரிம்மா நாங்கள் கிளம்பிறோம்" என்றவன் அமரனை அவளிடம் இருந்து வாங்கியவன் மகேந்திரனிடம் சரி நாங்கள் கிளம்பறோம் மகி… என்று விடைபெற்றனர்.

காரின் கதவைத் திறந்து அவளை அமரச் சொன்னவன் பின் பிள்ளையை அவளிடம் கொடுத்துத் தானும் ஓட்டுனர் இருக்கையில் அமர்ந்து அனைவரிடமும் விடைபெற்றுக் கிளம்பினான்.

மௌனம் மட்டுமே அங்கே வலம் வந்தது.

எதுவும் பேசாமல் வரும் தன் கணவனின் முகத்தைப் பார்த்தத் தாராவிற்கு அதில் விழுந்துப் பரவி இருக்கும் சிந்தனை ரேகைகள் கண்டு…

“என்ன ரொம்ப யோசிக்கிறீங்க… இன்றைய மீட்டிங் நல்லவிதமாக முடிந்ததா… இல்லை உங்கள் வேலையை விட்டுவிட்டு வந்துட்டீங்களா… அது தான் மாமவோடு வந்துட்டு இருந்தோமே அப்பறம் என்னங்க... தேவையில்லாத அலைச்சல் உங்களுக்கு” என்றாள் தாரா.

"பொண்டாட்டியையும் பிள்ளையையும் கூட்டி வர‌ நினைப்பது தேவையில்லாத வேலையா… என்னடி மாமா மாமா ஆடிட்டு இருக்க" என்றான் கோபமாக…

கணவனின் கோபத்தில் கண்ணில் பயத்தோடு சட்டென அமைதியாக அமர்ந்தாள் எதுவும் சொல்லாமல்.

தன்னவளின் அமைதியில் அவளைத் திரும்பிப் பார்த்தவனுக்குப் பாவமாக இருந்தது அவளின் பயம் படர்ந்த முகம் பார்க்க…
மெல்லக் காரை ஓரமாக நிறுத்தியவன்…

அவளையே பார்த்தான்…
தன் பிள்ளையை இறுக பற்றி இருக்கும் அவள் செயலில் தனக்கென யாரும் இல்லை எனச் சொல்லாமல் சொல்லியது.

அதுவே அவனைக் கொன்றது…

மெல்ல… அம்மூ என்று அழைத்தான் தன் மனைவியை... தன் மனதில் செல்லம் கொஞ்சும் பெயரில்…

அவள் அமைதியாக இருக்க…மீண்டும் அம்மூ என்று அவள் முகத்தைத் தன்னை நோக்கித் திருப்பியவன் "இப்போ எதுக்கு இப்படிப் பயப்படுற" என்றான்.

" துணி எடுக்கும் போது சும்மா விளையாட்டுக்குத் தான்பண்ணாங்க, நளினியோடு சேர்ந்து உங்களை வெறுப்பேற்ற" என்று நடந்ததைத் திக்கித் திக்கிக் கூறவும்…


அந்த நேரத்தில் தனக்கு இருந்த கோபம் புரிந்து வைத்திருக்கிறாள் என்று அறிந்ததும் அவனுக்குச் சந்தோஷம் மடைத் திறந்த வெள்ளமாகப் பாய்ந்தது மனதில்.

"உன் மாமாவிற்கு உன்னோடு விளையாட உரிமை இருக்கிறது என்று எனக்குத் தெரியுமடி" என்றான்.

கண்களைத் தாழ்த்தி “உங்களுக்குத் அது தெரிந்தாலும்”… என்று விழி உயர்த்திப் பார்த்தவள்... பின் “சில நேரங்களில் பிடிப்பது இல்லை உங்களுக்கு” என்றாள் தாரா.

அப்படியா என்று உல்லாச மனநிலைக்கு வந்தான் அதியமான்.

"இப்போது எனக்கு என்ன பிடிக்கும் சொல்லு" என்று கேட்டான்.

அவன் காரை ஒதுக்குப் புறமாக நிறுத்தி இருப்பதைக் கண்டவள்… அவன் கேட்டக் கேள்விக்கான பதில் என்ன புரிந்ததும்…
தன் கீழ் உதட்டை மடித்துக் கடித்து மௌனமானாள்.
அவளின் இந்தச் செய்கையில் அவனின் சிந்தனை எல்லாம் தடைப்பட்டது…
அவன் கண்கள் அவள் இதழில் மையம் கொண்டது.

காரை எடுக்காமல் எதுவும் பேசாமல் தன் இதழ்களை மட்டுமே பார்த்துக் கொண்டு இருக்கும் கணவனின் பார்வையில்… அவள் மேனி… அவளைக்கேட்காமலேயே அவனுக்கு ஒத்துழைக்கத் தயாராக இருந்தது.

மெதுவாகத் தன் இடதுக்கரத்தை அவள் வலதுக்கன்னதில் வைத்து மென்மையாகத் தடவியவன்... கட்டை விரலைக் கொண்டு அவள் இதழ்களை மிருதுவாக வருடினான்…

கணவனின் செயலில் பதட்டம் அடைந்தாள் தாரா…‌ மெல்ல உறங்கும் மகனைப் பார்த்துப் பின் அவனை விழி உயர்த்திப் பார்த்தவளின் இதழ்களில் சரணடைந்தான் அதியமான். நீண்ட இதழ் முத்தத்தில் தன்னைத் தொலைத்தவன்… மெதுவாகவே தொலைந்த இடத்தில் இருந்து தன்னை மீட்டுக் கொண்டான்.

கையில் குழந்தையுடன் தடுமாறியவளைப் பிடித்த சிறுது நேரம் அணைத்துப் படி இருந்தவன் அவள் பழைய நிலைக்குத் திரும்பியதும் அவள் கன்னத்தில் மீண்டும் தன் முத்தத்தைப் பதித்தவன் வண்டியை ஓட்டினான்.

சிவந்த முகத்தைச் சரிசெய்யச் சிறிது நேரம் ஆனது அவளுக்கு.
பின் அவனைப் பார்த்து.. கையில் பையனை வைத்து இருக்கும் போது என்ன "இது விளையாட்டு".. என்று கோபமாகப் பேச முயன்றுத் தோற்றுப் போனாள் தாரா.

"நான் விளையாடவே… இல்லையே அம்மூ"… என்றான் அதியமான்.

அவன் அம்மூ என்று அழைத்ததைப் பார்த்து “இதென்ன புதிதாக.. அம்மூ” என்று கேட்டவளிடம்…

"புதிதெல்லாம் இல்லை ... நீ தான் கவனிக்க வில்லை… நான் உன்னை அடிக்கடி அழைப்பது தான்” என்றான் என்றான்.

"எனக்கே தெரியாமல் எப்போ" என்று‌க் கேட்டவளிடம் தன்னிலை மறந்த தன் கைகளில் மயங்கியிருப்பவளில் தன்னை இழந்து கொண்டு இருக்கும் போதெல்லாம் அப்படி அழைப்பான் என்று கூறியவனின் பதிலில் உண்டான வெட்கத்தில்… அவன் முகம் பார்க்க முடியாமல் தவித்தாள்…

இனி‌ என்ன பேச அவளும்… அவனின் ஒவ்வொரு வார்த்தைகளிலும் அவளைக் கட்டி அவனிடம் இழுத்துச் செல்கிறது…

அவளின் காதல் மட்டுமே அவனுக்குப் போதும்… அதை அவன் முழுதுமாகத் தெரிந்து கொள்ளும் போது அவன்‌நிலை என்னவாக இருக்கும் என்று அவனுக்கே தெரியாது…


தன் மனைவியின் தடுமாற்றம் கண்டவனுக்குப் புன்னகைப் பிறக்க… அந்த இரவு நேரத்தில் சத்தாமாகச் சிரித்தவனின் செயலில் வீட்டிற்குப் போகாலாம்... "பையன் விழித்துக் கொண்டால் அழுவான்…தூங்க நேரம் ஆகும்" என்று சாதரணமாகக் கூறியவளின் வார்த்தைகளைக் கேட்டவன் "ஆமாம், அதுவிம் சரிதான்... இல்லை என்றால் நமக்குத் தான் கஷ்டம்" என்று இருபொருள் படப் பேசிய கணவனின் பேச்சில்…
பிள்ளையை ஒரு கையில் வைத்துக் கொண்டு மற்றொரு கையில் கணவனின் முகத்தைத் தன்னிடம் இருந்து திருப்பி... சாலையோரம் பார்க்க வைத்தவள் வண்டியை எடுங்கள் என்னவளின் கண்களில் காதல் காவியம் பாடியது…

இனி அவளைச் சீண்டி விளையாடினாள் தனக்குத் தான் சேதாரம் அதிகம் என்று மனதில் நினைத்தவன் வேகமாக வீட்டை நோக்கிப் பயணித்தான்…

தொடரும்…
 
Top