எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மனதில் ஆடும் காதல் மந்தாரா - 17

subasini

Moderator
மனம் -17

உறவுகளைப் பிடித்த வைக்க விட்டுக் கொடுக்கத் தயாராவோம்…

விட்டுக் கொடுத்துப் போவதால் தான் பல குடும்பங்கள் இன்னும் ஒற்றுமையாக வாழ்ந்து கொண்டு இருக்கின்றனர்…

விட்டுக் கொடுத்தால் கெட்டுப் போவதில்லை…

தாரா வீட்டின் பெரிய மருமகளாகத் தன் கடமையைச் செவ்வனே செய்ய முனைந்தாள்.


வேகமாகத் தன் கணவனிடம் வந்தவள்…

“என்னங்க இப்படித் தனியாகப் போகிறோம் என்று சொல்லிட்டு வந்து இருக்கீங்க… அத்தை என்ன நினைப்பாங்க... தப்பில்லையா என்று கேட்டாள்.

"என்ன இருந்தாலும் நீங்கள் அவங்க மகன்…‌ நான் நேற்று வந்தவள்… இதெல்லாம் குடும்பத்தில் இருப்பது தானே... இதற்கெல்லாம் தனியாகப் போக வேண்டுமா” என்று கேட்டாள்…


“நீயே சொல்கிறாய் அம்மா பையன் உறவென்று… நான் நேற்று வந்தவளென்று… அம்மா பையன் உறவில் இன்று நாங்கள் சண்டைப் போடுவோம், நாளை சேர்ந்துக் கொள்ளவோம்… எல்லாம் ஒரு கட்டத்தில் சரியாகிவிடும் தாரா… ஆனால் நீ அப்படி இல்லை… உனக்காக நான் இன்று யோசிக்க வில்லை என்றால், வாழ்க்கை முழுவதும் நீ மனதளவில் வேதனைப் படுவதை வேடிக்கை மட்டுமே நான் பார்க்க வேண்டி வரும். ஆரம்பத்திலேயே எதுவாக இருந்தாலும் சரி பண்ணிறணும். பிறகு என்றால் அது நடவாத காரியம்” என்றான்.

கணவனின் வார்த்தைகளைக் கேட்டுத் தன்னால் குடும்பம் பிரிந்து விட்டது என்று வருத்தப்பட்டாள் தாரா.

“நான் அனுசரித்துப் போயிக்கிறேங்க…‌ அம்மா பையனைப் பிரித்த பாவம் எனக்கு வேண்டாமே” என்று கண் கலங்கினாள்.

“ என் குடும்பம் என்று நிலையில் இருந்து… நம்மளோட குடும்பம் என்ற நிலைக்கு மாற வேண்டும்… என் துணை இல்லாமல் உன்னால் முடியாது… என் துணையோடு இந்தக் குடும்பம் உன்னுடையதாக மாற்ற போகிறாயா… என் துணையின்றிப் போராடத் தயாராகப் போகிறாயா” என்று கேட்டான்

கணவனின் துணையின்றி எதுவும் செய்ய முடியாது என்று நிலையில் இருந்தாள்.

பிறந்த வீட்டுத் துணை இல்லை என்று நினைத்தவளுக்குப் புகுந்த வீடு என்பது கனவாகிப் போனது.

எதுவும் சொல்லாமல் அமைதியாகத் தன் பெட்டியை அடுக்கியவள் ‌சோர்வாகப் படுக்கையில் வந்து படுத்து விட்டாள்.

எல்லாம் தலைகீழாக மாறிவிட்டது…

வாழ்க்கையில் இப்படி எல்லாம் நடக்கும் என்று அவள் உறக்கத்தில் கூடச் சிந்தித்தது இல்லை.
இரண்டு வீட்டின் எதிர்ப்பு... தொழிலில் தன் கணவன் பூஜ்ஜியமாக நிற்பது எல்லாம் தன்னைக் கல்யாணம் செய்ததால் மட்டுமே என்று நினைத்தாள் தாரா.

கண் மூடி மனதிலேயே புலம்பிக் கொண்டு இருந்தாள் தாரா.

அவளைப் பார்த்தவனுக்குப் புரியத்தான் செய்தது… என்ன செய்ய விதிச் சில நேரங்களில் விளையாடும் விளையாட்டுகளில் நாம் வெறும் பொம்மையாக நின்றுக் கொடுக்க வேண்டும்.

சட்டென அடித்த கைப்பேசியில் சிந்தனைக் கலைத்தவன் வேகமாக எடுத்து “சொல்லு இனியா” என்றான்…

“ஓ ..இதோ வரேன் டா‌” என்றவன்…

“தாரா, கிளம்பலாமா” என்றான் அதியமான்.

கண் கலங்கச் சரியெனத் தலையை ஆட்டினாள்.

பிள்ளையை எடுக்கப் போனவளைத் தடுத்து அவனை “நான் எடுத்துக்கிறேன் நீ உன் லக்கேஜ் ‌மட்டும் எடுத்துட்டு வா” என்றான் அதியமான்.

கீழே குடும்பமாக இறங்கி வந்ததைப் பார்த்த இனியன் வேகமாக வந்து அவன் கையில் இருக்கும் பெட்டியைக் கொண்டு போய் அவன் காரில் வைத்தான் பின் தாரா விடம் வாங்கிக் கொண்டு போய் வைத்தவன் நேராகச் சாந்தியிடம் வந்தவன்…

“எல்லாம் சரியாக இருக்கிறாதா என்று பாரு ஆதி”… என்று அவர் கையில் இருக்கும் டாக்குமெண்ட் வாங்கிக் காட்டினான் இனியன்.

எல்லாம் ஒரு முறைச் சரி பார்த்தவன் வேகமாகக் கையெழுத்துப் போட்டான்.

தன் தாயிடம் எல்லாம் கொடுத்தவன் “சரிம்மா நாங்கள் கிளம்பிறோம்” என்று அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான் அதியமான்.

போகாதே என்று வார்த்தைகளைத் தாய் உதிர்க்கவில்லை… இது மனதின் ஓரத்தில் ஒரு புகைச்சலை உண்டாக்கியது அதியமானுக்கு…


அவர்கள் காருக்குப் பின்னே இனியன் தொடர்ந்து கொண்டு இருந்தான்.

அதியமானின் வாழ்க்கையில் அவன் குடும்பத்திற்கு எவ்வளவு முக்கியத்துவம் தருவான் என்று நன்றாகத் தெரியும்.. அப்படிப் பட்ட அவன் பிரிந்து செல்கிறான் என்றால் நன்றாக யோசித்து எடுத்த முடிவு என்று புரிந்தது இனியவனுக்கு.

இந்த நிலையில் அவனைத் தனியாக விடாமல் கூடவே இருந்தான் இனியன்.

அவன் பார்த்து வைத்திருந்த அப்பார்ட்மெண்டில் அவர்களை ஆலம் கரைத்து வரவேற்றார் யமுனா…
அவரைக் கண்டதும் கண் கலங்கக் கட்டிக் கொண்டாள் தாரா.

“எதுக்கு டா அழறா… முதல் முறையாக ஜோடியாக வரும் போது அழக்கூடாது...
கண்ணைத் துடை” என்றவர் அதியமானிடம்‌ இருந்து அமரனை வாங்கினார்.


“என் செல்லமே… அத்தை மறந்துட்டீங்களா” என்று கொஞ்சிக் கொண்டே அங்கிருந்துச் சென்றார்.

தங்கள் வீட்டிற்கு வந்த இனியனுக்குக் குடிக்க எதாவது கொடுக்க வேண்டும் என்று‌ வேகமாகச் சமையலறைச் சென்றாள் தாரா.

எந்தத் தயக்கமும் இல்லாமல் அவள் சமையலறைக்குச் சென்றதும்… நேற்றைக்கு அவள் தயங்கித் தயங்கி, தங்கள் வீட்டுச் சமையலறையில் நின்ற விதம் நினைத்துப் பார்த்தவன்… அதைத் தன் நண்பனிடம் கூறினான்…

“அவளுக்கு இது‌ உன் வீடு… இங்கே உனக்கும் உரிமை உள்ளது … எது வேண்டுமானாலும் செய்யலாம்… என்ற நம்பிக்கை என் அம்மா அவளுக்குத் தந்திருக்கணும் இனியா... அதை அவங்கத் தரவே இல்லை.. அவள் வீட்டில் வேலைச் செய்யும் உமாவிடம் தான் எல்லாம் கேட்டுக் கேட்டுச் செய்தாள்” என்று‌ நடந்ததைக் கூறினான்.

“எங்க அம்மாவை என்னால் எப்போ வேணாலும் சமாதானம் செய்ய முடியும் டா .... ஆனால் என் மனைவிக்குரிய மரியாதை…‌ ஆராம்பத்தில் இருந்து அதில் எந்தக் குறையும் இருக்கக் கூடாது” என்றான் தெளிவாக.

இனியனுக்குப் புரிந்தது அதியமான் என்ன யோசிக்கிறான் என்று.

சமையலறையில் எல்லாம் தயாராக இருந்தது அவர்களுக்கு…

இனியவன் மற்றும் அதியமானுக்கு உணவினைப் பரிமாறியவள்… இனியனைத் தன் சொந்த அண்ணன் போல் எல்லாப் பார்த்துப் பார்த்துச் செய்தாள்..

அவளின் இந்தக் குணம் கண்டு அவள் மேல் பாசம் உண்டானது இனியனுக்கு.

இவ்வளவு நல்ல பெண்ணை எப்படி வேதனைப் படுத்த தோன்றியது என்று‌ எண்ணினான்.

இரவு நேரம் வரை அங்கே இருந்த இனியவன் பின் விடைப் பெற்றுச் சென்றான்.

அவன் சென்றதும் யமுனாவைக் காண வந்தாள் தாரா. அங்கே அமரன் நன்றாக உறங்குவதைக் கண்டு அவனை எடுக்கப் போனாள்…‌ " தாரா இன்றைக்குக் குட்டி என் கூடப் படுக்கட்டும் விடு, எவ்வளவு நாட்கள் ஆச்சு ” என்று உரிமையாகச் சொன்னவர் அங்கே வாங்கி வைத்திருந்த பூவை அவளுக்குச் சூடி அழகுப் பார்த்தார் யமுனா…

“நீ போய்த் தூங்கு இன்றைக்கு அமரன் என்னுடன் இருக்கட்டும்” என்று அவளை அனுப்பி வைத்தார்.

படுக்கை அறைக்கு வந்தவள் எதுவும் பேசாமல் வந்து படுத்துக் கொண்டாள்…
அவளுக்குத் தன்னைத் திருமணம் செய்து எல்லாம் இழந்து நிற்கும் கணவனின் நிலையை எண்ணி வேதனையில் தூக்கம் வரவில்லை. இருந்த போதும் கண் மூடிப் படுத்திருந்தாள்… விழி வழிக் கண்ணீர் வழிந்தது அவள் கன்னத்தில்.

தன் அருகே கண்கள் மூடி அமைதியாகப் படுத்து இருக்கும் தாராவின் முகம் பார்த்தவன் அவள் அழுவதைக் கண்டு “என்னடி ஆச்சு” என்று எழுப்பி விட்டான்.


எழுந்து அமர்ந்தவளிடம்

“ஏன் அழற…‌என்ன ஆச்சு... சொன்னால் தானே தெரியும்” என்றவனைக் கட்டிக் கொண்டு அழுதாள் தாரா.


“எதுவும் இல்லாமல் எல்லாம் இழந்து நிற்கும் உங்கள் இந்த நிலைக்கு… என் ராசித் தாங்கக் காரணம்… என்னைக் கல்யாணம் பண்ணி இருக்கவே கூடாது நீங்க… ஒரே நாளில் இப்படி நடுத்தெருவில் நிற்க வைத்து விட்டேனே”… என்று கட்டிபிடித்து அழதுவளை அணைத்தவன் தன் காதலுக்கு அநியாயம் செய்யும் தன் சரிபாதியின் முகத்தில் இருக்கும் முடியை ஒதுக்கி விட்டான்.

அவள் தலையில் இருக்கும் பூவின் மணத்தை நுகர்ந்தான்…
அழுதுகொண்டு இருந்தவளுக்குக் கணவனின் செயலில் கவனம் செல்ல வில்லை…

கொஞ்சம் நாட்களாக அவள் கடந்து வந்த வலியில் உண்டான மன அழுத்தமெல்லாம் அழுகையாக வெடிக்க, வார்த்தைகளாகப் புலம்பிக் கொண்டு இருந்தாள்…

அதியமானுக்கோ, கணவன் என்ற உரிமையில் தன்னை இறுக்கமாக அணைத்திருக்கும் தாராவின் செயலில் மனதோரத்தின் காதல் கள்ளத்தனமாக உள்ளே வந்தது.

அவள் இடையில் கைவிட்டவன் … மற்றொரு கையில் அவள் புடவையைத் தளர்த்தினான்…


அவள் மேனியில் அவன் கைகள் செய்த மாயம், கன்னத்தில் கண்ணீர்க் கறைப் படிய விழிகளை உயர்த்தி அவனைப் பார்த்தவளின் பார்வையில் இருந்த மோகம் பார்த்தவனுக்கு … காதல் பித்துத் தலைக்கேறி, அவளைத் தன் ஆளுகைக்குக் கீழ் கொண்டு வந்தான்.

அழதவிழிகளில் மோகம் தவழச் சிவந்த தாராவின் முகம் அவ்வளவு அழகாக இருந்தது.

சிவந்த அவள் முகத்தில் தன் முத்தத்தால் நனைத்து எடுத்தான் அதியமான்.

“எதுக்கு டி இப்படி அழற… என் மேல் நம்பிக்கை இல்லையா உனக்கு”…
என்றவனின் குரல் அவ்வளவு மென்மையாக வெளி வந்தது.

“நான் இழந்து விட்டேன் என்று நீ வருந்தும் அனைத்தும்… ஒரு நாள் என் கைகளில் வந்து சேர்ந்திடும்… ஆனால் நீ”… என்றவன் அவள் முகம் முழுவதும் முத்தம் மிட்டு முத்தமிட்டு அவளைப் படுக்கையில் கிடத்தினான்…

மெல்ல அவள் மேல் படர்ந்தவன்... "இப்போ விட்டால் இனி எப்பொழுதும் உன்னை மனைவியாக்கிக் கொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்கும் என்று‌ச் சொல்ல முடியாது… என் காதலை எக்காரணம் கொண்டும் இழக்க நான் தயாரில்லை தாரா… உன்னைப் போல் ஒருத்தி இழப்பதற்கு நான்” என்றவன் அதற்கு மேல் பேசவில்லை அவன் காதலும் காமமும் தான் பேசியது அவள் மேனியில்…

அவனின் ஆளுகையில் கள் உண்ட வண்டு போல் கட்டுண்டுக் கிடந்தாள் தாரா…

பல‌ வார்த்தைகள் கொடுக்காத நம்பிக்கையும் காதலும் அவனுடன் காமத்தில் ஒன்றுகையில் உண்டானது தாராவிற்கு…

கணவனின் காதல் தன் முன் மண்டியிட்டு நிற்க இருகரம் கொண்டு ஏந்திக்கொண்டுவளின் செயலில் அவள் மேல் மோகம் மோதிடக் காதலில் “அம்மூ” என்றழைத்தவன் உணர்வுகளின் பிடியில் சிக்கிச் சிதைத்துக் கொண்டிருந்தவளுக்குத் தெரியவில்லை… என்ன பெயரில் அழைத்தான் என்று, அந்தக் கணத்தில் இருந்து அவளுக்கு எல்லாமுமாக மாறியிருந்தான் அதியமான்.


எல்லாம் முடிந்து அவன் கைகளில் சரணடைந்தவளிடம்…
“ தாரா…‌நம் வாழ்க்கையை‌ப் பூஜ்ஜியத்தில் இருந்து ஆரம்பிக்க வேண்டும் தான்.. அதற்கு எனக்கு நம்பிக்கையாக நீ வேண்டும் கூடவே… உன் அன்பும் காதலும் தான் என் தைரியம். இதெல்லாம் மாறிவிடும்… மாற்றி விடுவேன்… என் மேல் உனக்கு நம்பிக்கை இருக்குத் தானே‌” என்று கேட்டான் அதியமான்.
“இருக்கங்க… உங்கள் மேல் மட்டுமே இருக்கு” என்றவள் நம்பிக்கையைத் தன் முத்தத்தால் அவனுக்குக் கொடுத்தவள் கணவனை அணைத்துவாறே உறங்கிக் போனாள்…


கண்களில் உறக்கம் தொலைத்தவன், தன்னை அணைத்தபடி உறங்கும் தாராவைப் பார்த்தான்…

அவள் மனதின் சந்தோஷத்திற்காகவே வாழ்க்கையில் ஜெயிக்க வேண்டும் என்ற உத்வேகம் உண்டானது அவன் மனதில்.

எல்லாம் சரியாகத் திட்டம் போட்டு வைத்தி இருக்கிறான்… நினைத்ததைச் சாதிக்கும் வல்லமைப் படைத்த இந்த அதியமான்…

எந்தச் சுயநலமும் இல்லாமல் தன் கௌரவத்தைப் பணயம் வைத்தவளின்‌ மரியாதையை ஈட்டுத் தர வேண்டும் அதே நேரம் தானும் வாழ்க்கையில் அடுத்த நிலைக்கு உயர வேண்டும்…‌ஊண்‌ உறக்கம் இல்லாமல் அயராத உழைப்பினைப் போட வேண்டும்…


செய்ய வேண்டிய எல்லாம், உறங்காமல் தன் மடிக்கணினியில் பதிவுச் செய்தவன்... தயார் செய்து வைத்த புதிய ப்ராஜெக்டை எல்லாம் சரிப்பார்த்தான்.

நாளைய தினம் எல்லாம் நல்லதாக இருக்க வேண்டும் என்று இறைவனிடம் முறையிட்டான்…
பின் தாராவின் அருகில் வந்து அவளை அணைத்துபடிப் படுத்தான்…

அவளில் தனக்கான கூட்டினைத் தேடி வந்து உறங்கும் பறவையைப் போல ஒன்றினான்…

அவள் மேனியின் சூட்டில் மெல்லக் கண் அயர்ந்தான்.

விடியும் என்ற அதியமானின் நம்பிக்கையைப் போன்றே... கிழக்கே சூரியன் பிராகாஷமாக உதித்தான்.

மெல்லக் கண் விழித்தவளுக்கு… அப்பொழுதுதான் புரிந்தது நேற்றைய இரவில் நடந்ததெல்லாம்…

ச்சீ…எவ்வளவு மட்டியாக இருக்கின்றோம்... அவரே‌ப் பாவம்…‌‌ இந்தச் சூழ்நிலையில் இப்படி ஒரு கூடல் சங்கமத்தை நினைத்துப் பார்க்கவில்லை தாரா… எல்லாம் திட்டம் போட்டு நடப்பதில்லை… அதுவாகவே நடக்கும் போது தான் வாழ்க்கையில் அழகுச் சேர்க்கும் என்று‌ மனதில் நினைத்தவள் வேகமாகக் குளித்து வந்தாள்.

பூஜை அறையில் விளக்கேற்றிச் சாமிக் கும்பிட்டவள்... சுப்ரபாதத்தை மெல்லிய ஓசையில் ஒலிக்க விட்டவள் இனி எல்லாம் நல்லவிதமாக நடக்க வேண்டும் என்று மனதார வேண்டினாள்.

இரண்டு வீட்டுப் பக்கமும் தன்னை ஒதுக்குவதை நினைத்து வருந்த நேரமில்லாமல் தாரா மற்றும் அதியமான் பறந்துக் கொண்டிருந்தனர். அந்த அளவிற்கு வேலைகள் அவர்களைப் பரப்பரப்பாக வைத்துக் கொண்டது.

மாதங்கள் கடக்க… அதியமான் புதிய கம்பெனிக்கு அவன் எதிர்பார்த்த ப்ராஜெக்ட் கிடைக்கவும் அதில் அவன் மட்டும் இல்லாமல் தாராவும் பஸியானாள்.

இனியன் கம்பெனியில் தன் வேலையை முடிந்ததும், மாலை வீட்டிற்கு வந்தவள் தன் கணவனுக்காவும் உதவினாள்.

புதிய ப்ராஜெக்டிற்குத் தன் கல்லூரி ஹெச் ஓ டி இடம் பேசி மாணவர்களை இன்டெர்ன்ஸிப் செய்ய வைத்து… அதில் சிறந்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து வேலையையும் கொடுக்கலாம் என்ற தாராவின் ஐடியா நல்ல வரவேற்புப் பெற்றது… அதில் லாபமும் இருந்தது அதியமானுக்கு… ஒவ்வொரு செயலிலும் தாராவின் மேல் காதல் வேரூன்றியது அவனுக்கு.

தன் வெற்றிக்கு அவள் போராடும் விதம் அவளை ராணி போலத் தாங்கச் சொன்னது அவன் காதல்.
வேண்டாம் என்ற சொன்னப் போதும் அவனுக்காகத் தினமும் இரவில் உதவியாகப் பணிப் புரியும் அவள் அர்ப்பணிப்புக் கண்டு ஆச்சரியமாக இருந்தது அவனுக்கு.

நாட்கள் மாதங்களாக வேகமாகச் சென்றுகொண்டிருந்தது…

என்ன தான் தொழில் துறையில் நிற்க நேரமில்லாமல் ஓடினாலும்... தன் குடும்பத்தின் காரியங்களை எல்லாம் கவனித்துக் கொண்டு இருந்தான் அதியமான்…

தாராவின் வீட்டில் மகேந்திரன் கல்யாணம் மற்றும் தன் தம்பியின் கல்யாணம் இரண்டு ஒரே தேதியில் வைக்கப் பேசிக் கொண்டு இருந்தான் கங்காதரனிடம் தன் கைப்பேசியில்.

அவனுக்குக் குடிக்க டீயைக் கொண்டு வந்து குடுத்த தாரா, "யாரோடு பேசிட்டு இருக்கீங்க" என்று கேட்டவாறே அவனுக்கு டீயைக் கொடுத்தாள்.

அவள் தந்த டீக்கோப்பையை வாங்கியவன் “நீயே பேசு” என்று கையில் அலைபேசியைக் கொடுத்தான்…

ஹலோ… என்றவளின் குரலைக் கேட்டதும் எதுவும் பேசாமல் சட்டென அழைப்பைத் துண்டித்தார் கங்காதரன்.

“என்னங்க, கட் பண்ணிட்டாங்க” என்று, யாரென்று பார்த்தவளுக்கு... தன் தந்தையின் எண்ணை கண்டதும் கலங்கிய விழிகளை… அவனிடம் காட்டாமல் டீக்கோப்பையை வாங்கியவள் அங்கிருந்துச் சென்றாள் வேகமாக.

இன்னும் தன் மேல் இருக்கும் கோபத்தின் அளவு குறையாமல் பாதுக்காக்கும் தந்தையின் குணத்தின் முன் அடிப்பட்டு நின்றாள் தாரா.

இப்போ வரைக்கும் தன்னை அழைக்க வில்லைத் தாய், புனிதா… என்ன செய்கிறேன் என்றும் விசாரிக்க வில்லை… ஆனால் மருமகனிடம் மட்டும் உறவுக் கொண்டாடும் அவர்கள் மனநிலைப் புரியவில்லை அவளுக்கு.


தவறு தன் மேல் தானே… என்ன இருந்தாலும் சில விஷயங்கள் பெற்றவர்களிடம் மறைக்கக் கூடாது என்பதை வலிக்க வலிக்கக் கற்றுக் கொண்டாள் தாரா…

‘சிறு பிள்ளை வெள்ளாமை’ என்ற சொல்லுக்கு ‌வாழ்க்கையில் புத்திசாலித்தனம் என்று தான் நினைத்துச் செய்தச் செயலே சிறந்த உதாரணமாகிப் போனது.
தாரிகாவின் திருமணம் நல்லபடியாக நடந்து முடிந்தால் போதும் என்று நினைத்தாள்.


நாளை தன் மாமியாரைக் காணச் செல்ல வேண்டும் என்று மனதில் நினைத்தாள்…

அதியமான் செல்ல வில்லை என்றாலும் அடிக்கடி, தன் புகுந்தகம் சென்று வருவாள் தாரா…

காலை அலுவலகத்திற்குத் தாமதமாக வர அனுமதி வாங்கியவள் சாந்தியிக்குக் கால் வலி என்று உமா, சொன்னதைக் கேட்டு அவள் வாங்கி வந்த தைலம் எல்லாம் எடுத்துக் கொண்டு வந்திருந்தாள்.

"அத்தை… இப்போ கால் வலி எப்படி இருக்கிறது" என்று கேட்டாள்.

“ம்ம் பரவாயில்லை” என்று முகம் திருப்பியவளைக் கண்ட, தாரா... "சாப்டீங்களா நீங்கள்" என்றவள் நேராகச் சமையலறைக்குள் வந்தாள்.


சாந்தியின் பாராமுகத்தைப் பெரியதாக எடுக்காமல் அங்கே சென்று சிறிது நேரம் இருந்து உமா விடம் பேசிச் சிரித்து… அவளிடம் “அத்தையைப் பார்த்துக்கொள்ளுங்கள் அக்கா… வயதானவங்க… அதிகம் நடக்க விடாதீங்க... சதீஷ் மனைவி வந்தாள் உங்களுக்குத் துணையாக இருப்பாங்க” என்று தாரிகாவும் தன்னைப் போல் தான் என்று மனதில் நினைத்துச் சொல்லிக் கொண்டு இருந்தாள் தாரா.



உமாவிடம் தினமும் பேசுவாள் ஒரு சகோதரிப் போல்…
திருமணத்திற்குப் பின் உமா, தன் வாழ்க்கையில் இணைத்துக் கொண்ட புதிய உறவு அவளுக்கு.

அன்றைய தினம் வேகமாகச் சென்றது அவளுக்கு.எல்லாம் முடிந்து மாலையில் வீட்டிற்கு வந்தாள் தாரா.


தன் பிறந்த வீட்டில் தாயுடன் ஆனா மனஸ்தாபம் காரணமாகத் தாரிகா அவளுடன் பேசுவது குறைவாகிப் போனது. அது தான் அவளுக்குச் சொல்லி அடங்காதுத் துயரத்தைத் தந்தது.

அவளின் நன்மைக்காகச் செய்த அனைத்தும் இன்று தனக்குப் பல உறவுகளைப் இழக்கக் காரணமானப் போதும் அவளுக்கு எல்லாம் நல்லதாக இருந்தால் போதும் என்று மனநிலைக்கு வந்தாள் தாரா.


மனதில் துக்கம் இருந்தும் கைகள் அதன் வேலையைச் செய்து கொண்டு இருந்தது… அவள் சிந்தனையைக் கலைத்தது நளினியின் போன் கால்…

“ஹலோ.. சொல்லுடி”... என்ற தாராவின் குரலைக் கேட்டதும்…

“நாங்கள் எல்லாம் இருக்கோமா இல்லையா, ஒரு போன் கால் பண்ணி மாட்டியா டி நீ… உன் வீட்டில் தானே பிரச்சினை… நான் என்ன பண்ணினேன்” என்று சண்டைக்கு வந்தாள் நளினி.

“அழகாகச் சிரித்தவள்… உன் மேல் எனக்கென்ன கோபம். நான் எப்போ போன் பண்ணினாலும் அது‌பிஸி என்று வருது... உனக்கென்னம்மா‌ லவ் பண்ண என் மாமா இருக்காரு‌… நேரம் காலம் தெரியாமல் காதலிக்கலாம்… நான் அப்படியா.. வேலைக்குப் போகணும் பிள்ளைக்குட்டிக்காரி”…என்று‌ ஏற்றி இறக்கினாள் வார்த்தைகளை…

“அது… நீ‌ என்னைக் கூப்பிட்டாயா? எனக்குத் தெரியவே இல்லை” என்றாள் நளினி…

“ம்ம் உன்னோட போனில் போய்க் கால் ஹிஸ்டரிப் பாருடி மக்கு டீச்சரம்மா”... என்று கேலிச் செய்தாள் தாரா.

“ஆமாம் ‌என் மாமா என்ன சொல்லறாரு" என்ற‌வளின் கேள்விக்கு…

"எங்க அதியமான் அண்ணா உன்னிடம் என்ன சொன்னோரோ... அதுதான் உன் மாமாவும் சொல்லறாரு” என்று தாராவைக் கேலிச் செய்தாள் நளினி.
நளினியின் வார்த்தைகளைக் கேட்டதும் கணவனின் முகமும் அவன் அவளைச் சமாதானம் செய்து விதமும் நினைவில் வந்து மேனிச் சிவந்தாள் தாரா.

சட்டென்று தோழியின் மௌனத்தைப் புரிந்துக் கொண்ட‌ நளினி… “என்ன தாரா”... என்று பேசியதெல்லாம் அவளைக் கிண்டல் செய்தத் தோழிகளின் அந்தரங்கப் பேச்சுக்கள் மட்டுமே.

இவர்களின் நட்பு இறுகியதில் பொறாமை உண்டானது தாரிகாவிற்கு… நளினியின் அவகனிப்பு, தாராவின் மேல் பகையை உண்டாக்கியதில் அவளிடம் பேசுவதைக் குறைத்திருந்தாள்… அது‌மட்டும் இல்லாமல்... சாந்தியின் மனதில் தாராவின் மேல் இருக்கும் கோபமும்… அமரன் பற்றிய எதுவும் வெளியே வரக் கூடாது என்று‌ அவளின் சுயநலமும் தாராவிடம் ஒதுங்கி இருக்கச் சொன்னது.

நாம் நினைக்கும் எல்லாம் நல்லாதாக இருப்பதில்லை….


மற்றவரின் நல்ல குணத்தை நாம் சுயநலத்திற்காகப் பகடைக் காயாக உபயோகிக்கக் கூடாது…அது நல்லதும் இல்லை என்று உணரும் நாளும் வரும் தாரிகாவிற்கு…
பல கனவோடு காத்திருக்கும் அவள் கல்யாண வாழ்க்கையில் அவள் கற்றுக் கொள்வாள்…

தொடரும்…
 
Top