மனம் - 15
வாழ்க்கையில் பயணங்கள் எப்பொழுதும் முடிவதில்லை... திசைகள் மாறிப் பயணித்துச் செல்லும்... தாராவின் வாழ்க்கையையும் திசைத் திருப்பி இருக்கிறான் அதியமான்.
அழகான கார்ப் பயணம்…
முதல் பயணத்தில் தந்தையின் உடல் நிலைச் சரியில்லை என்று காரணத்தால் அவன் அருகாமை உணர மறந்தவளுக்கு இந்தப் பயணம் அப்படி அமையவில்லை…
அமரனைப் பின் இருக்கையில் பேபி ஷிட்டரில் கிடத்தியதால், அவன் நன்றாகப் பாதுக்காப்போடு உறங்கினான்… வழியில் அவன் அழுதால் அவனுக்காக எல்லாம் ஒரு பேக்கில் எடுத்து வைத்திருந்தாள் நளினி.
நல்ல படியாகக் கல்யாணம் முடிந்ததில் ஆனந்தமாக இருந்தான் தாராவின் கணவன் அதியமான்.
சந்தோஷ அலையடிக்க முகமோ புன்னகையில் நிறைந்தது இருந்தது.
தன் அருகே புதிய மஞ்சள் கயிறுக் கழுத்தில் தவழ, மணப்பெண்ணுக்கான அலங்காரத்தில் அவன் கண்களுக்கு அழகாக இருந்தாள் தாரா…
கார் ஓட்டிய படி அவளை ரசித்துப் பார்த்தான் கணவன் என்ற உரிமையில்…
அவன் பார்வையின் மாற்றம் அவளுக்குப் புரிந்ததும் தன் பார்வையை ஜன்னல் வழியே திருப்பினாள்…
அவளின் ஒவ்வொரு செயலிலும் கவரப்பட்டவன்… மனதில் ஓ!! என்னைப் பார்க்க மாட்டாயா… இரு வரேன் என்று வழியில்... பசுமை நிறைந்த பகுதியில்... ஒரு மரத்தில் நிழலில் காரை நிறுத்தியவன்... இருக்கையில் இருந்து திரும்பி அவளை மட்டுமே பார்த்துக் கொண்டு இருந்தான்…
கார் நின்றதும் என்ன என்று திரும்பியவளுக்குத் தன்னை நன்றாகத் திரும்பி அமர்ந்துப் பார்த்துக் கொண்டு இருப்பவனின் செயலில்…
“என்னங்க” என்று கேட்டாள்…
“இன்னைக்குத் தான் நமக்குக் கல்யாணம் ஆகி இருக்கிறது…
அத்தானைக் கவனிக்காமல்… அப்படி ஜன்னல் ஓரம் என்ன வேடிக்கை” …
நேரடியான அவன் பேச்சில் வாயைப் பிளந்துப் பார்த்தவளின் செயலில் சிரித்தவன்…
“ பதில் சொல்லுத் தாரா… இப்படிப் பார்த்தால் என்ன அர்த்தம்” என்றவனின் கேள்வியில் என்ன பதில் சொல்வது என்று புரியாமல் கன்னம் சிவந்தாள் தாரா…
இப்படி எல்லாம் பேசுவானா! என்ற கேள்வியும் மனதில் உதித்தது அவளுக்கு…
“மெல்ல, சரி வண்டியை எடுங்கள்.. நேரம் ஆகிறது”…
என்றாள் தாரா…
ம்ஹூம் என்று மாட்டேன் தலையை எதிரும் புதிருமாக அசைத்தான்… “எனக்கு ரொம்பச் சோர்வாக இருக்கிறது” என்றான்…
“இருங்க… ஜூஸ் எதாவது குடிக்க வைத்திருப்பாள் நளினி… நான் பார்க்கிறேன்” என்று பின்னிருக்கையின் பகுதிக்குத் திரும்பும் நேரம் அவள் முகம் அருகே சென்றவன்… “எனக்கு டையர்ட் தான்… ஆனால் ஜூஸ் வேண்டாம்” என்றான்…
தன் அருகில் இருக்கும் அவன் முகத்தைப் பார்த்து “அப்பறம் நான் என்ன பண்ண” என்றவளின் கேள்விக்கு …
“நீ ஒன்றும் செய்ய வேண்டாம் … நான் தான் இருக்கேனே” என்றவன் அவள் இதழ்களைப் பார்த்தான் அதியமான்…
மெதுவாக அவள் இதழ்களை வருடியவன் முகத்தையே காதலோடு நோக்கினான்.
அவளின் அமைதியும் அன்பான குணமும் அவளிடம் அவனைச் சரணடையச் செய்தது…
அவள் மேல் அவனுக்கு இருக்கும் காதல் அவளிடம் தன்னைத் தொலைக்கச் செய்தது…
மென்மையான அவள் இதழ்களைசழ்களைச் சொந்தமாக்கும் முயற்சியில் வெற்றிப் பெற முடியாமல் … இருக்கும் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு அவளை விடுவித்தான்… அவனின் இந்தச் செயலைக்கொஞ்சம் கூட எதிர்பார்க்கவில்லை தாரா…
யாராவது பார்த்து விட்டால் என்ற பயம் உண்டாகப் பதட்டமானாள்…
“என்னங்க… இது… இப்படி” என்றவள்…
அவனை விட்டு விலகி அமர்ந்தாள்…
அதில் அவளையே முகம் மாற நோக்கியவனின் செயலில் ஒன்றும் புரியாமல் என்ன என்று அப்பாவியாகப் பார்த்து வைத்தாள்…
“எதற்காக இவ்வளவு இடைவெளி நமக்குள்… இந்த விலகல் எனக்கு வலிக்குது” என்றவன்…
“உன் வாழ்க்கையில் எல்லாம் நானாக இருக்க வேண்டும்… உன் சந்தோஷம்... துக்கம் எல்லாம் என் தோளில் சாய்ந்து நீ பகிர வேண்டும்” என்றான் அதியமான்…
ஒன்றும் விளங்கவில்லை அவளுக்கு… இப்போது எதற்கு இந்தப் பேச்சு என்று விழிச் சிறுத்து… இமைச் சுருக்கியவளின் செயலில்…
“மகேந்திரன் அன்பு எனக்குப் புரிகிறது… ஆனால் எனக்குப் பொறாமையாக இருக்கிறது… நான் இப்படி யாரிடமும் எதிர் பார்க்கவில்லை… உன்னிடம் மட்டும் என்னால் அப்படி இருக்க முடியவில்லை… அதற்காக உன்னைச் சந்தேகிக்கிறேன் என்று நீ நினைக்காதே”… என்றவன் அவளின் அருகே நெருங்கி வந்து…
“உன் அன்பில்… உன் அணைப்பில் அமரனைப் பார்த்தாலும் எனக்கு இப்படித் தான் தோன்றுகிறது” என்று அவள் அருகில் இன்னும் நெருக்கமாக அமர்ந்து “உன் அன்பு எனக்கானது தாரா… அது யாரோடும் பங்கு வைக்க முடியாது… அது நம் பிள்ளையாக இருந்தாலும்” என்ற அவன் உச்சரித்த ஒவ்வொரு வார்த்தைகளிலும் காதல் மட்டுமே வழிந்தது…
இவ்வளவு அன்பும் காதலும் அவளுக்குத் திக்குமுக்காடச் செய்தது…
யாரும் இல்லை என்று நினைத்து வந்தவளுக்கு இப்படிக் காதல் மட்டுமே கையில் ஏந்திக் கொண்டு தன் சீராட்டும் கணவனின் அன்பில் கண்கள் கலங்க அவனைப் பார்த்தாள்.
இவ்வளவு காதலும் அவனிடம் இருந்து உதிப்பது தான் அவளுக்கு ஆச்சரியமாக இருந்தது... கண்களில் வெறுப்பு மண்டிக் கிடக்க... தன்னை இகழந்தவனின் மனதில்... தனக்கான காதலை உணரும் போது… இதெல்லாம் எப்படி நடந்தது… என்று அறிய வேண்டியிருந்தது அவளுக்கு.
தன் காதலை எல்லா வகையிலும் அவளிடம் சொன்னான் அதியமான்…
முத்தத்தின் வழி அவளை எவ்வளவு தேடிகிறான் என்று உணர வைத்தான்…
வார்த்தைகள் முலம் அவளின் அன்பும் அரவணைப்பும், அவனுக்கு மட்டுமே என்ற பொறாமையில் அவளிடம் அவன் என்ன எதிர்பார்க்கிறான் என்று புரிய வைத்தான்…
இனி வருங்காலத்தில் அவளின் மரியாதை, தனக்கான கௌவுரவம் என்றும் அனைவருக்கும் உணர்த்துவான் இந்த அதியமான்.
தான் அவ்வளவு சொல்லியும் எந்த எதிர்வினையும் காட்டாமல் தன் உலகில் சஞ்சரிக்கும் தாராவையே பார்த்தவனுக்கு... தன்னைத் திருமணம் செய்ய ஏன் மறுத்தாள் என்ற கேள்விக்கு அவள் தந்தப் பதில் அவன் மனதில் உதித்தது…
எல்லாம் மெதுவாக அவளிடம் கேட்டுத் தெரிந்துக்கொள்ளலாம் என்று மனதில் நினைத்தவன் வேகமாக வண்டியை ஓட்டினான்.
அவன் வேகத்தில் தான் அவன் கேள்விக்குத் தான் பதில் எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்து இருக்கிறோம் என்று புரிந்தது தாராவிற்கு.
மனதில் கணவனின் காதல் அவளின் மனவேதனைக்கு மருந்தாகியது…
தன் காதல் எப்படியெல்லாமோ வந்து தன் கையில் சேர்ந்திருக்கிறது… இந்தச் சில நாட்களில் தனக்குப் பல கஷ்டங்களை உண்டாகிய போதும் அதில் தனக்கு ஆனந்த நிறைவு என்பது கணவனின் காதல்… அவனுக்கே தெரியாமல் அவள் அந்தராத்மாவில் படர்ந்து வளரும் தன் காதல் என்று நினைத்தவள் சிரித்தபடியே அவனைப் பார்த்தாள்.
அவளின் எல்லாச் செயல்களையும் அருகே இருந்து கவனித்தவன்… 'இரு டி, என்னைடையக் கைகளில்ச் சிக்கிய பின் இப்படித் தான் இருப்பாய என்று நானும் பார்க்கிறேன்' இன்றைய தங்களுக்கான முதல் ராத்திரியை மனதில் நினைத்துச் சிரித்தான் அதியமான்.
இருவரும் அதியமான் வீட்டிற்கு வந்தனர்…
புது மணத் தம்பதியரின் வருகையை ஆலம் கரைத்து வரவேற்றனர்…
சாந்தி, தன் வீட்டில் வேலைச் செய்யும் பெண் உமாவிடம் சொல்லி ஆரத்தி எடுக்கச் சொன்னார்.
வலதுக் காலை வைத்துக் கையில் பிள்ளையோடு வீட்டில் முதல் அடி எடுத்து வைத்திருந்தாள் தாரா…
புதிய இடம் என்பதால் சினுங்கிக்கொண்டு இருந்தான் அமரன்…
அதியமானோ கைப்பேசியில் பிஸியாக இருந்தான்... தொழில் முறை அழைப்பில் முக்கியமாகப் பேசிக்கொண்டு இருப்பதால் அவனைத் தொந்தரவுச் செய்யாமல்…அமரனை அழாமல் இருக்க அவளால் முடிந்து வரை முயற்சிச் செய்தவள் ஒரு கட்டத்தில் உமா விடம் வந்து “அக்கா… இவனுக்கு ரொம்பக் கசக்கச இருக்கு, அது தான் இப்படிச் சினுங்குகிறான், அவனுக்கு உடம்புக் கழுவி உடை மாற்றணும்” என்றாள் தயங்கிபடி…
“இதோ தம்பி ரூம் மேலே தான் இருக்குக் கண்ணு… நீங்க போங்க அங்கே… நான் தம்பி எங்கே பார்க்கிறேன்” என்றாள் உமா…
“சரி அக்கா” என்றவள் அவள் காட்டிய திசையில் சென்றாள்.
தங்கள் பெட்டி எல்லாம் காரில் தான் இருந்தது… அதை எடுத்துக் கொண்டு வரவில்லை என்ன செய்ய என்று பார்த்தவள், வேகமாக அதியமான் உபயோக்கும் துண்டை எடுத்துக் கொண்டு போய்த் தன் மகனைக் குளிக்க வைத்து, அந்தத் துண்டை அவனுக்குச் சுற்றி எடுத்துக் கொண்டு வெளியே அவள் வந்த அந்நேரம் அதியமானும் வந்தான்.
“ஓ! உன்னோட திங்ஸ் இன்னும் கொண்டு வரவில்லையா…
இதோ எடுத்துக் கொண்டு வருகிறேன்” என்று சென்று அவளுடையது எல்லாம் அவனே கொண்டு செல்வதைப் பார்த்தச் சாந்தியம்மா…
"இப்படியா ஒருத்தன் பொண்டாட்டித் தாஸானாக மாறுவான்” என்று தலையில் அடித்துக் கொண்டு சமையலறைக்குள் சென்றாள்…
தானும் குளித்துப் புதிய புடவை ஒன்றை எடுத்து உடுத்தியவள்... எளிமையான அலங்கரித்தில் வந்தவள் அமரனை அதியமானிடம் கொடுத்தாள்…
"நான் போய் அவனுக்குக் குடிக்கப் பால் எடுத்துட்டு வரேன்... கொஞ்சம் நேரத்துக்கு அவனைப் பார்த்துக்கோங்க” என்றவளின் உரிமையானச் செயல் அவனுக்குப் பிடித்திருந்தது.
மெல்லக் கீழே வந்தவள் சாந்தியிடம்…
“அத்தை... குட்டிக்குப் பசியில் அழறான் பால் இருக்கா” என்று கேட்டாள்…
“ஏன் நீ உன்னோட பால் குடிக்கக் குடுக்க மாட்டாயா?… உடற்கட்டுக் கெட்டுப் போகும் என்றுப் புட்டிப்பால்க் கொடுக்கிறாயா?” என்றார், சாந்தி…
இப்படி ஒரு கோணத்தில் சிந்திக்க வில்லை அவள், இதற்கு என்ன பதில் சொல்வது... கண் கலங்க நிற்கத்தான் முடிந்தது அவளால்... புதிய இடம் தன் மாமியார் தன்னிடம் பேசய முதல் வார்த்தைகளைக் கேட்டு மனதில் மிகப்பெரிய அடி வாங்கினாள் தாரா.
அந்த இடத்தில்… வேலைச் செய்யும் பெண் முன்னே அவளுக்குத் தலையிறக்கமாகப் போனது… அவளின் நிலை உணர்ந்த உமா அங்கிருந்துத் தோட்டத்திற்குச்செல்லத் திரும்பிதும், அவள் நோக்கியது என்னவோ அங்கே பிள்ளையோடு நின்றிருக்கும் தங்கள் முதலாளியைத்தான்…
அவனைப் பார்க்காதது போல் தோட்டத்திற்கு வேகமாகச் சென்றவள் மனதில் என்ன இந்த அம்மா இப்படிப் பேசிட்டாங்க என்று எண்ணினாள்.
தன் தாயின் பேச்சுக்கள் அவனை வருத்தியதில்… இந்த வீட்டில் தன் மனைவியின் நிலை
எப்படி இருக்கும் என்று நன்றாகப் புரிந்தது அவனுக்கு…
கையில் பாலோடு மகனைப் பார்க்க வந்தவனின் முகத்தைப் பார்த்தவனுக்கு அவள் அழகிய விழிகள் சிவந்திருந்தது.
அங்கே கணவனைப் பார்த்ததும் இதழில் செயற்கையான புன்னகையோடு அவனிடம் இருந்து மகனை வாங்கியவள்... அவனுக்குப் பசியாற்றத் தங்கள் அறைக்கு வந்தாள் தாரா.
திருமணம் நடந்ந முதல் நாள் என்ற உணர்வு அங்கே யாருக்கும் இல்லை… அதற்கான எந்த ஒரு சம்பவம் நடக்க வில்லை… அவள் வீட்டில் இருந்து இங்கே குடி மாறி வந்த உணர்வே தாராவிற்கும் இருந்தது…
அதியமானுக்கும் உள்ளே இருந்த ஒரு நம்பிக்கை உடைந்தது… என் குடும்பம் தானா என்றக் கேள்வி மனதில் உதித்தது…
தனக்கும் மனதில் ஆசை இருக்கும் தானே... ஏன் இந்த அம்மா இப்படி நடந்து கொள்கிறார்... நான் என்ன செய்தாலும் அதில் கண்டிப்பாகக் குடும்பத்தின் நன்மையைச் சார்ந்ததே இருக்கும் சொன்ன அவர்கள் வார்த்தைகள் எல்லாம் வெறும் வார்த்தைகள் தானா…. என்ன மனிதர்கள் என்று ஒரு சலிப்பு உண்டானது மனதில்… அந்த நேரம் அவன் போனுக்கு அழைப்பை விடுத்து இருந்தான் இனியன்.
எதுவாக இருந்தாலும் அதியமான் உடனே எல்லாம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று எண்ணினான் இனியன். சமயம் கடத்தினால் வேதனையின் அளவு அவனுக்குத் தான் அதிகமாக இருக்கும் என்று உணர்ந்தவன் எல்லாம் சொல்லி விடுவது என்ற முடிவுக்கு வந்திருந்தான்.
"ஹலோ.. என்ன டா இந்த நேரத்தில்" என்றான் அதியமான்…
சத்தமாகச் சிரித்த இனியன் " என்ன டா, பூஜை வேலைக் கரடியாக என் போன் கால் வந்திருச்சா" என்று கேட்டான் இனியன்.
ஒரு சலிப்போடு… "போடா நீ வேற இங்கே நடக்கிறது பார்த்தால், என்னால் என் குடும்பத்தில் இருக்கும் இவங்களால், என் மனைவிக்குத் தீர்தாலும் தீராத வலியைத் தந்திருவேனோ என்ற பயம் மனதில் வருது டா… வேற எந்த எண்ணமும் இல்லை.. வீட்டிற்கு வந்த ஒரு மணி நேரத்தில் எல்லாம் வறண்டுப் போயிருச்சு" என்று வெளிப்படையாகத் தன் வேதனையைப் பகிர்ந்தான் அதியமான்.
"புரியுது ஆதி... அதற்குத் தான் இந்த மாதிரி நேரத்தில் கூட யோசிக்காமல்… நான் உன்னைக் கூப்பிட்டது" … என்றான் இனியன்…
"சுத்தி வளைக்காமல் விஷயத்திற்கு வாடா நான் எப்படி உன்னிடம் சொன்னேன் அதுபோல் தெளிவாகப் பேசு" என்றான் அதியமான்.
தன் நண்பன் நிலை உணர்ந்தவன்... சாந்தியம்மா, தன்னிடம் கேட்டது.. அவரின் சந்தேகம்… அவரின் பயம் எல்லாம் ஒன்று விடாமல் சொன்னவன்… அவங்களுக்குத் தாராவைப் பிடிக்கவில்லை என்பதையும் கூறினான்…
“தாரிகா அளவிற்கு அவள் பார்க்க அழகாக இல்லை என்று நினைக்கிறாங்க போல டா” என்றான் இனியன்.
அவன் சொல்லச் சொல்ல.. மகனோடு விளையாடிக் கொண்டு இருக்கும் தன்னவளைத் திரும்பிப் பார்த்தவனுக்கு அவள் பேரரழிகியாகத் தோன்றினாள்…
ஒரு ராணியின் தோரணையோடு தன் இளவரசனிடம் விளையாடும் தாரா அவன் கண்களில் தெரிந்ததாள்.
ஆதி… என்ற இனியன் குரலில் நிகழ்காலத்திற்கு வந்தவன் "அவள் எனக்குப் பேரரழகி டா" என்று காதலோடு கூறினான்…
அதியமான் காதலை உணர்ந்தவன்... "காதல் பித்துத் தலைக்கேறி இருக்கிறது போல ஆதி.. என் தங்கச்சிப் பாவம் சின்னப் பொண்ணுடா"… என்று கேலிச் செய்தான் இனியன்…
சின்னப் பொண்ணா என்று மீண்டும் அவளைப் பார்த்தவனுக்கு அவள் வனப்பும் அழகும் பித்தம் கொள்ளச் செய்தது…
"என்னடா" என்ற இனியவனின் குரலில்…
"இதற்கு என்ன செய்ய… அவள் கூடப் பழகாமல், அவள் எப்படிப் பட்டவள் என்று எதுவும் தெரியாமல், அம்மா ஏன் இப்படி ஒரு முடிவுச் செய்யறாங்க என்று தான் தெரியவில்லை இனியா.. ரொம்ப வலிக்குது"…
"புரியுது ஆதி.. கண்டிப்பாக இனி வரும் காலங்களில் நிம்மதி என்பது இருக்காது" என்ற நண்பன் வார்த்தைகளில் உள்ள உண்மையங உணர்ந்து இருந்தான் அதியமான்.
"இனியா... நம் புதுப் புராஜெக்ட் என் பேரில் ஃபைல் பண்ணிரு.. அப்பறம் இப்போது போயிட்டு இருக்கப் பிஸினஸ் சதீஷ் பெயருக்கு எல்லாம் பக்காவாகப் பண்ணிரு" என்றான் அதியமான் …
"எனக்கு இந்த டாக்குமெண்ட்ஸ் எல்லாம் நாளைக்கு மார்னிங் கிடைக்குமா" என்றான் அதியமான்.
"ஆதி உன்னோட அவசரத்துக்கு இதெல்லாம் நாளைக்கு ஒரு நாள் முழுசாக வேணும் டா" எனக்கு என்றான்…
"ம்ம் புரியுது டா…அப்பறம் எனக்கு ஒரு போவர் வேணும் , உன்னோட சைட் இருந்து" என்று கேட்டான் அதியமான்.
“என்னடா இப்படிப் பேசற..நீ விஷயத்தைச் சொல்லு” என்றான் இனியன்.
“உன்னோட தங்கைக்கு உன் கம்பெனியில் வெர்க் கொடுக்கணும் டா அது மட்டும் உன் சார்ப்பாகவொரு உதவி டா” என்றான் அதியமான்.
"தங்கச்சி வேலைக்குக் கண்டிப்பாகப் போகணுமா டா" என்று கேட்டான் இனியன்…
"ஆமா டா... அவள் வீட்டுச் சைட் அவள் எக்கானமிக் சப்போர்ட் தான் பேலன்ஸ் பண்ணுது.. அவள் உதவி எல்லாம் கேட்கும் ஆள் கிடையாது டா... அதுதான்" என்று தன்னவளைப் பற்றி நன்கு அறிந்து கூறினான் அதியமான்.
"புரியுது ஆதி… என்றவன் தங்கச்சிக்கு வேலைக் கன்பார்ம் டா, நாளைக்கே வந்து ஜாயின்ட் பண்ணிக்கலாம்"… என்று உறுதித் தந்தான் இனியன்…
"ரொம்பத் தேங்க்ஸ் டா இனியா" என்றான் அதியமான்…
"என்ன மேன் கேவலமாக நன்றி எல்லாம் சொல்லக் கத்து வெச்சு இருக்க" என்றவன்
"சரி சரி நீ உன்னுடைய இந்த டே என்ஜாய்ப் பண்ணுடா" என்றான் இனியன்…
"ம்ம் எங்கே டா, அவள் மனநிலையைப் பார்க்கணும் இல்லையா நான்… அவள் பாவம் டா" என்றான் அதியமான்…
"ம்ம் புரியுது... சரி நான் நாளைக்கு வரேன்" என்று அழைப்பைத் துண்டித்தான் இனியன்.
மகனை உறங்க வைத்தவள் சமையலறைக்குச் சென்றாள்… இப்படியே இருப்பதும் நன்றாக இருக்காது அல்லவா, தான் இந்த வீட்டின் மருமகள் அதற்கான கடமைகள் இருக்கிறது தானே…
"என்னங்கப் பையனைப் பார்த்துக் கொள்ளுங்கள்.. நான் போய்ச் சமையல் வேலையைப் பார்க்கறேன்" என்றாள் தாரா…
தன் அருகே வந்தவளின் கைகளைப் பிடித்தவன்.. "இன்றைக்குத் தானேடி நமக்குக் கல்யாணமாகிருக்கிறது… விடு அதெல்லாம் அவங்கப் பார்த்துக் கொள்ள வாங்க" என்றான்…
"இல்லைங்க அது நல்லா இருக்காது" என்றவள் வேகமாகக் கீழே வந்தாள்.
சமையல் அறையில் மாமியார் தன்னைப் பற்றி உமாவிடம் பேசிக் கொண்டு இருக்கும் பேச்சிக்குரல் தான் கேட்டது அவளுக்கு... திருமணம் முன்னே பிள்ளைக்குத் தாயானவளிடம் என்ன நல்லது இருக்கும் ... ஒழுக்கம் இல்லாதவள் என்ற வார்த்தையைக் கேட்டுக் கொண்டே அங்கே வந்தாள் தாரா.
உள்ளம் ரணமாகியது இந்தச் சொற்களைக் கேட்டு… இப்படி ஒரு நிலை வரும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை…நல்லது செய்யப் போய் இப்படி ஒரு கெட்டப் பெயர் எடுக்க நேரிடும் நினைக்கவில்லை அவள்…
பின்னில் அரவம் கேட்டுத் திரும்பிய உமாவிற்கு அவளைக் கண்டதும் "என்ன வேணும்மா" என்றார்..
"இல்லை எதாவது உங்களுக்கு உதவலாம் வந்தேன்" என்றாள் சாந்தியின் முகத்தைப் பார்த்து…
என்ன செய்ய வேண்டும் என்று வரிசையாக உமாவிடம் சொன்னவர் அங்கிருந்து விருட்டென்று தன அறைக்குச் சென்றார்.
உமாவின் உதவியோடு எல்லாம் செய்தவளின் பாங்கில்.. "இவ்வளவு நன்றாகச் சமைக்கத் தெரியுமா உங்களுக்கு" என்று கேட்டாள் உமா…
அதற்கு ஒரு புன்னகையைப் பரிசாகத் தந்தவள் "அக்கா. அத்தை மற்றும் அவரோடு தம்பியைச் சாப்பாட அழைத்து வாருங்கள், நானும் அவரைப் போய்ப் பார்க்கிறேன்" என்று சென்றாள் தாரா…
அறையில் மகனோடு ஒரு சிறு பிள்ளை என உறங்கும் கணவனைத் தான் வந்து பார்த்தாள் தாரா.
அவனுக்குத் தான் தன் மேல் எவ்வளவு காதல் என்று மனதில் நினைத்தவள் இது
என்றைக்கும் இப்படியே இருக்கணும் என்று எண்ணினாள் தாரா.. மெல்ல அவனை அழைத்தாள் மகன் உணராத வண்ணம்…
உறக்கத்தில் இருந்து கண் விழித்தவனனின் கண்ணுக்கு அழகியாக நின்று கொண்டு இருந்தாள் தாரா.
"சாப்பட வாங்க எல்லாம் ரெடி" என்றவள் "உங்களுக்குப் பிடித்ததும் செய்து இருக்கிறேன்" என்றாள்…
"நீ, சமைச்ச எல்லாம் எனக்குப் பிடிக்கும்" என்றவனின் வார்த்தைகளைக் கேட்டுத் தும்மினால் தாரா…
"என்னடி ஆச்சு இப்படித் தும்மல் வருது , ஜலதொஷமா உனக்கு" என்றான் அதியமான்…
"அது தான் நீங்க இப்ப வைச்ச ஐஸ் தாங்க முடியாமல் தான் தும்மல் வந்திருச்சு"… என்று அவனைக் கிண்டல் செய்தால்…
"ஓஹோ…புருஷன் என்ற பயமின்றி என்னைக் கிண்டல் செய்யறாய்"… என்று அவன் மிரட்டவும் சட்டென்று முகம் மாறியது அவளுக்கு…
"நானும் உன்னைத் சீண்டினேன் என்றவன் போய்ச் சாப்பிடலாம் வா, நமக்குக் காத்திருப்பாங்க.. குட்டி எழுந்து அழுவதற்குள்ளேச் சாப்படலாம்" என்றுக் கீழே வந்தனர்…
"நாங்கள் சாப்பிட்டுப் போறோம்... அப்பறம் அவங்களைக் கூப்பிடு" என்று உமாவிடம் சாந்திக் கூறுவதைக் கேட்ட அதியமானுக்குப் பசிக் கட்டுப்பட்டுப் போனது.
தன் அறைக்குத் திரும்பியவனின் சத்தத்தில் திரும்பிய சாந்தி, தன் பெரிய மகனை எதிர் பார்க்கவில்லை... "இல்லை தம்பி உங்களைத் தொந்தரவு செய்ய வேண்டாம் என்று நினைத்தேன்" என்றார்.
“புரியுது அம்மா” என்றவன்… “எனக்குச் சாப்பாடு மேலே கொண்டு வாங்க உமாக்கா” என்றான் .
இந்த நேரத்தில் எப்படிக் கையாள என்று நிஜமாகவே தெரியவில்லை தாரா விற்கும்.
அவளும் கணவனோடு தன் அறைக்குச் சென்றாள்…
சின்னச் சின்ன விஷயங்கள் தான் மிகப் பெரிய முடிவுகளை எடுக்கக் காரணியாக அமைகின்றது வாழ்க்கையில் என்பதை உணர்த்தும் தருணங்களைச் சாந்தி உருவாக்கிக் கொடுத்தார் …
அவரையும் குற்றம் சொல்ல முடியாது அல்லவா... தன் பெரிய மகன் வாழ்க்கையில் தனக்கு முடிவு எடுக்கும் உரிமை இருக்கிறது என்று நினைத்தவருக்கு... அவன் குடும்பமாக வாழ்ந்து இருக்கிறான் என்றச் செய்தி அவனின் மேல் இவ்வளவு காலமும் இருந்த நன்மதிப்புக் குறைந்தது…
இழந்து மதிப்பும் மரியாதையும் எப்படி மீட்டெடுப்பான் என்ற கேள்வி அவன் முன்னே அவனை விடப் பெரியதாக நின்றது…
நாளைக்கு விடியும் நாள் எல்லாம் இழந்து ஒரு புள்ளியில் இருந்து வாழ்க்கையை ஆரம்பிக்க வேண்டிய கட்டாயத்தில் அதியமான்.. அதற்குக் காரணம் அவன் திருமணம். அவன் மனைவியாக எந்த அளவுக்கு அவனுக்கு ஆதரவுத் தருவாள் தாரா…
அவள் திருமணம் என்ற
புள்ளிகளில் நிற்க அவன் நகர்த்திய விஷயம் அறிந்தால் அவளுக்கு அவன் மேல் இருக்கும் காதல் என்ன ஆகும் என்ற கேள்வியும் அவர்கள் வாழ்க்கையைத் தீர்மானிக்கும்…
தொடரும்…