மனம் - 13
நம்முடையது என்று மனதில் நினைத்து, எல்லாம் உரிமையோடு செய்கிறோம்…
நமக்கு உறவுகள் தேவைபடும் நேரத்தில் தெரிந்த விடும் யார் நம்முடையவர்கள் என்று…
குடும்பத்திற்காக இது வரை எடுத்த முடிவெல்லாம் எல்லாம் சரியானதாக இருந்தது... தனக்கு என்று அவன் ஒரு முடிவு எடுக்கும் போது எப்படித் தவறானதாகப் போகும் என்று, அம்மா ஏன்? நினைக்கவில்லை என்ற கேள்வி அவன் மனதில் உதயமானது. ஆனால் அதியமானுக்குச் சிந்தித்து வருத்த பட நேரமில்லை…
அவன் எண்ணம் முழுவதும் எப்படியாவது இந்தத் திருமணம் நல்ல விதமாக நடக்க வேண்டும் என்பது மட்டுமே.
என்ன இருந்த போதும்… இது வரை தாரிகா வாய்த் திறவாமல் இருப்பது மண்டைக்குள் குடைந்து கொண்டே இருந்தது அவனுக்கு… ஏன் அமைதியாக இருக்கிறாள்... தாராவின் வேதனை முழுவதும் அவளால் தானே… என்ன இருந்த போதும் பெற்ற பிள்ளையை எப்படி விட்டுக் கொடுக்க முடிந்தது அவளால், என்ற எண்ணம் மனதில் உதிக்கத் தொடங்கியது அதியமானுக்கு.
அதியமானின் எண்ணங்கள் உண்மை என்பது போல் தான் இருந்தது தாரிகாவின் செயலும்.
அதிகம் அமரனிடம் ஒட்டாமல், ஒதுக்கத்தைக் காட்டினாள்... அவனுக்குச் சித்தியாகவே வலம் வந்தாள்…
அவளுக்கு மனதில் பயம் இருந்தது… எங்கே உண்மைத் தெரிந்தால் அவமானப் பட வேண்டி வருமோ என்று... அதனால் மௌனம் என்னும் பூட்டிட்டு உண்மையை அடைத்து வைத்தாள்.
அதியமான் சென்றதும் தான் அந்த வீடே தாராவிற்கு அன்னியமாகத் தோன்றியது…
சமையலறைக்குள் வந்தவள்…
“ அம்மா... பால் இருக்கா... அமருக்கு வேணும் அழறான்” என்று எதார்த்தமாகக் கேட்டவளின் வார்த்தைகள் எதுவும் காதில் விழுகவே இல்லை என்று தன் வேலையைச் செய்து கொண்டு இருந்தாள் புனிதா…
அம்மா என்று மீண்டும் அழைத்தாள் அதற்கு எதிர்வினை ஆற்றாமல்.. அங்கே ஒருத்தி நிற்கிறாள் என்று உணராமல் தன் வேலையில் கவனம் செலுத்தும் அவள் பெற்றவளின் செயலில் மனதில் அடி வாங்கினாள் தாரா.
தாயின் கோபத்தின் ஆழம் உணர்ந்ததும் கண்ணில் சட்டெனச் சூடான கண்ணீர் உற்பத்தி ஆகியது…
மெல்ல, பால் பாத்திரத்தில் கை வைக்கச் சென்றவளின் கையைத் தட்டி விட்டதில் பால் அப்படியே கீழே சிந்தியது…
இப்படி ஒரு செயலைத் தன் தாயிடம் இருந்து எதிர் பார்க்கவில்லை தாரா.
அழுதபடி வெளியே வந்தவளைப் பாவமாகப் பார்த்தாள் நளினி.. அப்பொழுதுத் தான் வந்திருந்தாள்... தன் தோழிகளின் வீட்டில் போய்க் கொண்டு இருக்கும் சூழ்நிலையில் தன்னால் முடிந்த உதவி அவர்களுக்குச் செய்ய வந்தவள் கண்டது தாராவை வேதனைப் படுத்தும் அவள் தாயைத் தான்…
தன் தோழி தாரிகாவின் மேல் கோபம் வந்தது.
இதெதுவும் கவனிக்காமல் தன் அறையில் முடங்கி இருந்தாள் அவள்…
வேகமாக அவள் அறைக் கதவைத் தட்டினாள் நளினி.
யாரென வந்து கதவைத் திறந்தத் தாரிகாவை உள்ளே தள்ளி…
“என்னடி உங்க அம்மா இப்படிப் பண்ணறாங்க” என்று கேட்டாள்.
“என்ன பண்ணாங்க... தெளிவாகச் சொல்லுடி” என்றாள் தாரிகா.
நடந்ததைச் சொன்னவள்... "பேச்சாமல் உண்மையைச் சொல்லிறலாம் தாரிகா, எவ்வளவு கஷ்டம் அவளுக்கு… அவளால் தான் அப்பாவிற்கு உடல்நிலைச் சரியில்லாமல் போனது என்ற கோபம் தான் காரணம்… அதியமான் அண்ணா மேல் கூட இவ்வளவு கோபம் அவங்களுக்கு இல்லை… அதுவும் இல்லாமல் உனக்கும் சதீஷிற்கும் கல்யாணம் என்று முடிவும் ஆகிருக்கு அதனால் தைரியமாகச் சொல்லலாம் தாரிகா… எல்லாம் சரியாகிவிடும்” என்று தனக்குத் தெரிந்த நியாயத்தை எடுத்துக் கூறினாள் நளினி.
“அம்மா தாயே, நியாயம் நேர்மை என்று எதாவது பண்ணி இன்னும் பிரச்சினைகளைப் பெரிசுப் பண்ணாதே… இப்போ போறப் போலவே இருக்கட்டும்… இதெல்லாம் மாறும் நளினி... தாரா எல்லாம் சரி பண்ணிருவாள்” என்றாள் தாரிகா.
“அவள் சரி பண்ணுவா…ஆனால் உன் பிள்ளை உனக்கு வேண்டாமா” என்று நேரடியாக விஷயத்துக்கு வந்தாள் நளினி.
நீண்ட அமைதிக்குப் பிறகு… “அவனுக்கு நான் சித்தியாகவே இருந்து கொள்கிறேன் நளினி.. தேவையில்லாத குழப்பமான மனநிலையைக் குழந்தைக்கும் நான் கொடுக்க விரும்பவில்லை… அவன் பிறப்புச் சான்றிதழில் இருந்து எல்லாமே அவள் பெயரில் இருக்கிறது. இதெல்லாம் எதற்கு நடக்க வேண்டும் யோசி… எல்லாம் விதியின் விளையாட்டு” என்று தத்துவம் பேசினாள் தாரிகா…
“விதியின் விளையாட்டு இல்லையடி, உன் சுயநலம் தான்” என்றவள் அதற்குப் பின் அங்கே நிற்கப் பிடிக்காமல் வெளியே வந்தவள் பார்த்தது தாராவைத் தான்…
எப்படி எதிர்வினையாற்ற என்று தெரியாமல் இருவரும் தினறி நின்றனர்.
முதலில் சுயம் பெற்ற நளினி.. “தாரா, பசியில் அழறான் பாரு... நீ அவனுக்கு எதாவது சாப்பிட எடுத்துக் கொண்டு வா, நான் அவனை வைத்திருக்கிறேன்” என்றுப் பிள்ளையை வாங்கிக் கொண்டாள் நளினி.
சிரிப்பு என்ற பெயரில் உதட்டை நீட்டிக் காட்டியவள் பிள்ளையை அவளிடம் கொடுத்து விட்டுத் தன் அத்தையின் வீட்டை நோக்கி நடந்தாள்…
அவள் எங்கே செல்கிறாள் என்று புரிந்ததும் அவளும் பின்னாடியே சென்றாள் தங்கத்தின் வீட்டிற்கு.
அங்கே உணவு உண்ண அமர்ந்து இருந்த மகேந்திரன் பெண்கள் இருவரும் பிள்ளையை எடுத்துக் கொண்டு வந்ததில் நெற்றிச் சுருங்கப் பார்த்தான்.
“அத்தை…பால் இருக்கா... பையன் அழறான்” என்றுக் கேட்டாள் தாரா.
அவள் முகத்தைக் கூர்ந்துக் கவனித்து அத்தையின் எண்ண ஓட்டத்தைத் தடுக்க ... “இல்லை நான் தான் கவனம் இல்லாமல் கீழே தட்டி விட்டு விட்டேன்” என்றாள் தாரா.
அத்தையும் மருமகளும் பேசுவதைக் கேட்ட மகேந்திரன்…நளினியின் முகத்தைப் பார்த்தவனுக்கு அவள் முகம் அவனுக்கு நடந்தது வேறு என்பதற்கு ஆதாரமாக இருந்தது.
எழுந்துக் கைக்கழுகியவன் அவளை அழைத்து வெளியே வந்து “ என்ன நடந்தது” என்று நேரடியாகக் கேட்டான் .
தயங்கி நின்றாள் நளினி…
வேகமாக அவளைத் தன் அருகே இழுத்தவன் “என்ன நடந்தது”... என்று குரலில் கடுமையைக் கொண்டு வந்து கேட்டான் மகேந்திரன்.
அவன் செயலில் பயந்த நளினி... புனிதா நடந்து கொண்ட விதமும்... தாரிகாவின் பேச்சையும் ஒன்று விடாமல் அவனிடம் கூறியவள் சட்டென அழுது விட்டாள்.
“ஏய்… நீ எதுக்கு இப்போ அழற…
அவளே தைரியமாகத் தானே இருக்கிறாள்… விடு நாம் கூட அவளுக்கு உறுதுணையாக இருப்போம்” என்று கூறினான் மகேந்திரன்.
“இல்லை தாரிகா இருந்த சூழ்நிலையைக் கையில் எடுத்து அவளுக்கு எந்தப் பாதிப்பும் வராமல் பிள்ளையையும் காப்பாற்றி... எல்லாக் கெட்டப் பெயரையும் தன் மேல் ஏற்றுக் கொண்டாள் தாரா .
அவள் வேதனையில் இருக்கும் போது ஒரு துணையாகத் தோள் தாங்க வேண்டாமா… அதுக்கூட விடுங்க... பெத்தப்பிள்ளையை எப்படிங்க மாற்றான் தாய் மனப்பான்மையில் பார்க்க முடியும்” என்று கண் கலங்கக் கேட்டாள் நளினி.
"பெறாத பிள்ளைக்குத் தாயாகப் போராடத் தாரா இருக்கும் போது... பெற்றப்பிள்ளையை மாற்றான்தாய் மனப்பான்மையில் நடந்தும் தாரிகாவும் இருக்கலாம்" என்று அவளிடம் கூறியவன் அவளைத் தன்னருகே இழுத்து நெருக்கமாகக் கொண்டு வந்தவன்…
“இவ்வளவு மென்மையான மனம் உள்ள உன்னைப்போலவும் பெண்கள் இருக்காங்க”… என்றவனின் அதிரடியில் பெண் அவள் காதலில் தடுமாறினாள்.
“உனக்கு என் வாழ்க்கையில் பங்கு வேண்டாமா" என்று கேட்டான்… மேலும் "என் விதி நீயென இருக்கும் போது நீ என்னருகில்… நான் உனக்கு வாழ்கையும் தருவேன்… என்ன தரட்டா” என்று அவள் அன்றுக் கேட்டக் கேள்விக்கு இன்று பதில் சொன்னான் மகேந்திரன்.
என்ன சொல்ல எனத் தெரியவில்லை அவளுக்கு… “வீட்டில் வந்து பேசுங்கள்” என்றாள் நளினி.
"தாராவின் கல்யாணம் முடியட்டும் நான் அம்மாவிடம் பேசறேன்" என்றான்.
"அவங்களுக்கு என்னைப் பிடிக்குமா" என்று பயந்தவாறே கேட்டவளின் கேள்விக்கு…
"அதெல்லாம் எனக்குப் பிடிக்கும்" என்ற பதிலோடு அங்கே வந்தார் தங்கம்.
அவருக்குத் தன் பிள்ளைகளுக்கு நல்ல உள்ளம் கொண்ட பெண் மனைவியாக வருவது பிடிக்காமல் போகுமா…
நளினியின் அம்மாவிடம் முதலில் பேச வேண்டும் என்று மனதில் முடிவெடுத்தார் தங்கம்.
மகேந்திரன் மற்றும் நளினியின் திருமணம் பற்றித் தங்கம் தன் அண்ணன் வீட்டில் சொன்னார்… அதைக் கேட்டதும் புனிதாவற்கோ மனதில் எல்லோருடைய பிள்ளையின் திருமணம் அழகாக நிச்சயம் ஆகிறது ஆனால் என் மகளுக்கு என்று நினைத்தவருக்கு வேம்பு விழுங்கியது போன்று முகம் மாறியது.
நளினியின் தாயாரைத் தாராவின் திருமணத்திற்கு அழைக்கச் செல்வது போலச் சென்று தன் மகனின் திருமணத்தை உறுதிச் செய்து வந்தார் தங்கம்.
மகளின் திருமணம் அவளுக்குப் பிடித்த மகேந்திரன் உடன் என்பதில் சந்தோஷம் மட்டுமே இருந்தது அவள் பெற்றவருக்கு…
மகேந்திரனும் நல்ல அந்தஸ்தில் இருந்தான் அவனை வேண்டாம் என்று சொல்லும் அளவுக்கு எதுவும் இல்லை அவருக்கு நல்ல இடத்தில் மகளுக்குத் திருமணம் கைகூடியதில் நிம்மதி மட்டுமே.
இரண்டு நாட்களில் எல்லோருக்கும் நல்லது நடக்கும் போது... தங்கள் வாழ்வில் மட்டும் மனக்குறையோடு ஏன் இப்படி என்று மனதளவில் ஒரு சுணக்கம் இருந்தது புனிதாவிற்கு.
யாரும் எதுவும் கேட்கவில்லை என்ற போதும் தன் மகளின் செயலால் அவமானமாக உணர்ந்தார் புனிதா. தன் வளர்ப்புச் சரி இல்லை என்றும், தன் நம்பிக்கைப் பொய்த்துப் போனதன் வேதனையும் அவரை வாட்டி எடுத்தது.
மின்னல் என்னும் சொல்லுக்கு உதரணமாக இருந்தது இந்த இரண்டு நாட்களும்…
வேகமாகக் கடந்து சென்றது.
திருமணத்திற்குத் தயாராகிக் கொண்டு இருந்தது தாராவின் வீடு…
எளிமையான முறையில் அருகில் இருக்கும் கோயிலில் வைத்துத் தாலிக் கட்டும் நிகழ்வினை முடிவு செய்து இருந்தனர்.
மகேந்திரன் ஒத்த ஆளாக எல்லாம் பார்த்துக் கொண்டான்.
தங்கம் தன் அண்ணன் வீட்டு விஷேசத்தில் எந்த இடத்திலும் ஒரு குறை வரக்கூடாது என்று பார்த்துப் பார்த்துச் செய்தார்.
இவர்களுக்கு நளினி உடன் இருந்தாள் உதவியாக…
தாரா விற்கும் நல்ல தோழியாகத் தோள் கொடுத்தாள் நளினி. தாரிகாவின் தோழியாக அறிமுகமாகித் தாராவின் உயிர் தோழியாக இடமாற்றம் ஆனாள் நளினி.
தாரிகாவின் சுயநலம் தாராவிற்கும் உதவ முன் வர வைத்தது.
தாராவின் நல்ல மனது தான் இப்படியெல்லாம் சிந்திக்க வைத்தது நளினியை.
அதியமான் வீட்டில் கல்யாணம் வீடு போல் இல்லை… எளிமையாக நடக்கும் திருமணம் என்பதால்… நெருங்கிய சொந்தங்கள் யாரும் அழைக்கபட வில்லை… இதுவே சாந்திக்கு மிகப்பெரிய மனக்குறையாக இருந்தது.
“என்ன தம்பி.. வீட்டிற்குத் தலைமகன் நீ.. உன் கல்யாணம் நம் சொந்தம் சூலக் கல்யாணம் பண்ண வேண்டும் எனக்கு ஆசை இருக்காதா”… என்று மனத்தாங்கலைக் காட்டினார், சாந்தி.
"புரியுது அம்மா… இன்னும் கொஞ்ச நாளில் சதீஷ் கல்யாணம் நீங்கள் சொல்வது போல் பண்ணலாம்... கையில் பிள்ளையோடு திருமணம் நல்லா இருக்காது"… என்றான் அதியமான்.
"வாழ்க்கையில் இப்படி எல்லாத்துக்கும் அவசரப்பட்டால் என்ன பண்ண"…என்றவர்.. "ஒழுக்கம் இல்லாத பெண்ணால் நமக்கு எவ்வளவு கஷ்டம்" என்று சட்டென வார்த்தைகளை விட்டார், சாந்தி.
"அம்மா!!! அவள் இந்த வீட்டிற்கு வாழ வரும் பெண்... அவளைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியாமல் பேசாதீங்க" என்ற மகனின் வார்த்தைகள் எல்லாம் தன் மூத்த மகன் கை விட்டுச் சென்று விட்டான் என்று மனநிலைக்கு அவரைத் தள்ளியது.
தன் மனைவியாக வருபவள் மரியாதைப் பற்றிக் கங்காதரன் சொன்ன வார்த்தைகள் எல்லாம் மனதில் வந்து போனது.
தாராவிற்காக வருந்தியது.. இதில் தானும் அவளுக்கு வலியைக் கொடுத்து விட்டோமே என்று வேதனையில் முனகியது அவன் காதல் உள்ளம்.
மாலை நேரம் குடும்பமாகக் கிளம்ப வேண்டும்..இந்நேரத்தில் தன் தாயின் பேச்சுக்கள் அவனை வருத்தியதில்... கல்யாணம் என்ற சந்தோஷம் மனதில் ஊற, காதலில் விரகத் தாபம் அவனைப் படுத்தியெடுப்பதற்குப் பதிலாக... அவளுக்கு எந்த வேதனையோ அவமானமோ ஏற்படக் கூடாது என்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தான் அதியமான்.
அதனால் தன் தாய் மற்றும் தம்பியை ட்ரைவரோடு அனுப்பியவன்… முதலாவதாகக் கிளம்பி விட்டான் அதியமான்.
அவர்கள் வந்தடைவதற்கு முன்னமே வந்து அவர்கள் தங்குவதற்கான ஏற்பாடுகளைக் கவனித்தான்.
அங்கே பக்கதில் தனி வீடு காலியாக இருந்ததால் அவர்கள் சுலபமாக இருந்தது தங்குவதற்கு இதெல்லாம் மகேந்திரன் ஏற்பாடு செய்திருந்தான்.
அதனால் எந்த முனகலும் இல்லாமல் வசதியாக இருந்தனர் சாந்தியும் சதீஷீம்.
ரொம்ப நாட்கள் பிறகு தாரிகாவைச் சந்தித்தான் சதீஷ்.
அவனுக்கு என்ன எல்லாம் நினைவில் இருக்கு என்ற பதட்டத்தில் இருந்தாள் தாரிகா.
மாலை இவர்கள் வருகிறார்கள் என்று அறிந்ததும் தாரிகாவும் புனிதா மற்றும் தங்கம் அவர்களை வரவேற்கச் சென்றிருந்தனர்.
காரில் இருந்து இறங்கியதும் சதீஷின் கண்கள் தாரிகாவைத் தான் தரிசித்தது… விபத்து நடந்து ஒன்றரை வருடத்திற்குப் பிறகு அவளைப் பார்க்கிறான்… அவள் அழகு மேலும் மெருகேறி இருந்தது. கண்களில் காதல் வழிய அவளைப் பார்த்தான்… அவன் பார்வையில் உயிர் பெற்றாள் தாரிகா… அவன் காதல் மீண்டும் அவளை மீட்டெடுத்து…
அவனுக்குப் பின் இறங்கிய சாந்தியைக் கண்டதும் வேகமாகக் காலில் வீழ்ந்து ஆசீர்வாதம் வாங்கினாள் தாரிகா.. அதில் வருங்கால மாமியாரின் மனதில் நல்ல இடத்தைப் பிடித்தாள் தாரிகா. தன் காதல் கைக்கூடக் காரணம் தன் மாமியார் தான் என்று நம்பினாள் தாரிகா.
"வாங்க" என்று உள்ளே அழைத்துச் சென்று அவர்களுக்கு வேண்டிய அனைத்தையும் பார்த்துப் பார்த்துச் செய்தனர் மூவரும்... அதில் மனம் நிம்மதி உண்டானது சாந்திக்கு…
அங்கே மாட்டி வைத்திருந்த புகைப்படத்துப் பார்த்தச் சதீஷிற்குத் தாரா, தாரிகாவின் உடன் பிறந்தவள் என்பது கண்டதும் அதிர்ச்சி... அதில்லாமல் தன்னை அவள் அடித்ததும் நினைவிற்கு வந்தது.
அவள் தான் தன் அண்ணனைத் திருமணம் செய்யப்போகிறாள் என்ற உண்மையும் அப்போது தான் மனதில் உறைத்தது… அவளுக்கு ஒரு பையன் இருப்பது அறிந்து அவளைக் கேவலமாக நினைத்தான்… எனக்கு அண்ணியாக வரும் தகுதி அவளுக்கு இல்லை என்று நினைத்தான். தன்னைக் கேவலப்படுத்தியவள் இன்று கேவலப்பட்டு நிற்பதாகத் தோன்றியது.
தங்களை வரவேற்கும் போது அங்கே தாரா இல்லாதது அவள் மேல் பிடித்தமின்னையை அதிகப் படுத்தியது அவள் மாமியாருக்கு…
இரண்டு நாள் அலைச்சலில் மகனுக்குச் சளிப்பிடித்ததில், அழுதுகொண்டே இருந்தான்.. அவள் கையில் இருந்து யாரிடமும் அவன் செல்ல மறுத்து அழுதான்.. அதனால் சரியாக உணவு உண்ண கூட முடியாமல் கஷ்ப்பட்டாள் தாரா… இதை எதுவும் கண்டு கொள்ள வில்லை அவள் தாய், புனிதா.
இந்தச் சூழ்நிலைத் தெரியாமல் தனக்கான மரியாதைத் தரவில்லை தாரா என்று அவளைத் தவறாக நினைத்து விட்டார், சாந்தி.
கல்யாணப் பெண்ணிற்கான எந்தச் சடங்குகளும் அவளுக்குப் பண்ண முற்படவில்லை இதில் மனக்குறை இருந்தது மகேந்திரனுக்கு… ஆனால் எதுவும் பேசவில்லை எப்படியாவது கல்யாணம் நல்ல படியாக நடந்தால் போதும் என்ற நிலைக்கு வந்திருந்தான்…
அந்த அளவிற்கு வீட்டில் தாராவின் நிலை மோசமாக இருந்தது.
தன் தாயும் தம்பியும் தங்கி இருக்கும் வீட்டில் எல்லா வசதிகளும் இருக்கிறதா.. அவர்கள் சௌகரியமாக இருக்கின்றனரா? என்று பார்த்தான் அதியமான்.
எல்லாம் நல்லவிதமாகத் தான் இருந்தது.. ஆனாலும் அவன் அம்மாவின் முகத்தில் தெளிவு இல்லை.
அவர் அருகே வந்தவன்.. "என்னம்மா எல்லாம் சௌகரியமாக இருக்கிறாதா" என்று கேட்டான்…
"இல்லை என்று சொன்னால் மட்டும் இந்தக் கல்யாணத்தை நிறுத்துவியா"… என்று முகத்தைத் திரும்பினார், சாந்தி.
தன் தாயின் பேச்சில் இனி இந்தக் கல்யாணம் முடியும் வரை எதையும் கேட்கக் கூடாது என்று மனதில் நினைத்தான்.
மெல்ல அவங்கிருந்துத் தாராவைக் காண வந்தான் அதியமான்.
அவளோ தன் மகனோடு மல்லுக் கட்டிக் கொண்டிருந்தாள்.
அவனோ தன் அம்மாவின் பொறுமைச் சோதிக்க, நிறுத்தாமல் அழுதுகொண்டே இருந்தான்…
கீழே வைக்க விட வில்லை அவளை... படுக்கையில் படுக்கப்போட்டால் அழுதான் பிள்ளை... எடுத்துக்கொண்டே இருக்கவேண்டும் என்று அடம் பிடித்தான் அமரன். தன் தோளில் சாய்த்து அவனை உறங்க வைக்கப் போராடிக் கொண்டிருந்தாள் தாரா.
உள்ளே வந்தவன் அழும் மகனைப் பார்த்து "ஏன் அழறான்" என்றுக் கேட்டபடி அவளிடம் இருந்து அவனை வாங்கியவன்…
“ஏன் அப்பாவோட தங்கம் அழறாங்க… அம்மா அடிச்சாளாக் குட்டிச் செல்லத்தை” என்று தாராவைப் பார்த்தான் அதியமான்.
அவனின் செயலில் முறைத்தாள் தாரா.
அதியமான் கையில் வந்ததும் அழுவதை நிறுத்தி இருந்தான் அந்தக் குறும்பன்…
அதைக் கண்டதும் தாராவோ… "ம்ஹூம்… இவ்வளவு நேரம் என்ன அழுகைத் தெரியுமா? உங்களைப் பார்த்ததும் சத்தமே இல்லை… வர வர இவனுக்கு ரொம்ப ஒவர் குறும்பாகிருச்சு, சேட்டைப் பண்ணறான்… ” என்று மகனைப் பற்றிப் புகார் வாசித்தாள் தாரா.
அவளின் இந்தக் கோபம் கண்டு சிரித்தவன்… “அவனுக்கு அப்பா வேணும் எப்பவும் … நான் இல்லாமல் அவனால் இருக்க முடியவில்லை… உன்னைப் போல் இல்லை… ஒரு போன் கால் பண்ணியாடி நீ” என்று அவளிடம் செல்லமாகக் கோபித்துக் கொண்டான் அதியமான்.
அவனின் இந்த உரிமையில் சிலையென நின்றாள் தாரா.
நாம் எது பேசினாலும் இப்படி உறைந்துப் போய் நிற்பதே வேலையாகப் போய்விட்டது என்று நினைத்தான்.
மகனைத் தோளில் கிடத்தியவன்... இன்னொரு கையில் அவளை ஆசையாகத் தன்னோடு சேர்த்து அணைத்து இருந்தான். அவனின் இந்த அணைப்பில் அவள் உடல் நடுங்கியது.
"என்னடி இதற்கே இப்படி நடுங்கிறாய்... அப்போ மத்ததெல்லாத்துக்கும் என்ன பண்ணுவ" என்று அவளைக் கேலிச் செய்தான்.
அவர்கள் இருவரும் ரூமில் இருந்து பேசிக் கொண்டு இருப்பதை வெளியே இருந்து பார்த்துக் கொண்டு இருந்த இருவரின் தாய்மார்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தியது.
இதெதுவும் உணராமல் இருந்தாள் தாரா. உணர அவள் மகன் அவளை விட வில்லை.
அவளை எப்பொழுதும் பரபரப்பாகவே வைத்திருந்தான்.
"தாரா அம்மா வந்திருக்காங்க, வா" என்றவன் அவளையும் மகனையும் அழைத்துக் கொண்டு வந்தான்.
சாந்தியைக் கண்டதும் என்ன நினைப்பாரோ என்ற தயக்கம் அவளுக்கு இருந்த போதும் தன் பிள்ளையின் பாட்டி மற்றும் அதியமானின் தாய்... தன் வருங்கால மாமியார் என்று மனதில் பயம் உண்டானது.
மெல்ல அவரிடம் வந்தவள் "வாங்க" என்று அழைத்தவள் அவரிடம் ஆசிப் பெறக் காலில் வீழ்ந்தவளை நாசுக்காகத் தவிர்த்து அவளைப் புண் படுத்தினார். இதையாரும் கவனிக்க வில்லை என்றாலும் அதியமான் மற்றும் நளினியும் கண்டு கொண்டனர்.
கண் கலங்க எழுந்தவளின் அருகே வந்த நளினி “வா, தாரா உன் கரங்களில் மெஹந்திப் போட வேண்டாமா... பாரு உன் கைகளில் எதுவும் இல்லாமல் நன்றாகவே இல்லை” என்றாள்.
“அதெல்லாம் வேணாமடி” என்ற தாராவிடம்
“அப்படி எல்லாம் சொல்லக் கூடாதுத் தாரா, போ போய்ப் போட்டுக் கொள்” என்றார், தங்கம்.
“இல்லை அத்தைக் குட்டிக்கு லேசாக உடல் சூடு அடிக்குது… அவன் அழுதுட்டே இருக்கான் நான் கையில் இதெல்லாம் போட்டுக் கிட்டா அவனைப் பார்த்துக் கொள்ள முடியாது என்று தவிர்தவளை” பார்த்தான் அதியமான்.
"அவனை நான் பார்த்துக் கொள்கிறேன் நீ போய்ப் போட்டுக் கொள் தாரா" என்று அவளிடம் கூறினான் அதியமான்.
அவனைப் பாவமாகப் பார்த்தவள் 'வேண்டாமே' என்று கண்களால் கெஞ்சினாள்…
அதெல்லாம் முடியாது என்றவன்... போட்டுக் கொள் என்று கண்களால் கட்டளையிட்டான் அவர்களின் சம்பாஷனைகளை எல்லாம் ஒரு பிடித்தமின்மையோடு பார்த்து இருந்தனர் அங்கே இருந்தவர்கள்.
நளினியின் வற்புறுத்தலில் அவளுக்காகத் தன் கரங்களில் மெஹந்தியால் அலங்கரித்தாள் அதியமானின் பெயரை.
மகனை எடுத்துக் கொண்டு இனியன் காண வந்தான் அதியமான்.
"என்ன ஆதி.. எல்லாம் சரியாக இருக்கிறாதா" என்று கேட்ட இனியனிடம்... தன் வேதனையைப் பகிர்ந்தான் அதியமான்.
"என்னடா, பண்ணப் போற.. உன் அம்மா இப்போவே இப்படி அவளை அவகணிக்கும் போது... எப்படி அவளால் உன் வீட்டில் நிம்மதியாக இருக்க முடியும்" என்று கேட்டான் இனியன்.
"புரியுது" என்ற பதிலை மட்டும் கூறியஅதியமானின் முகம் சிந்தனையைத் தத்தெடுத்து இருந்தது.
விடிந்தால் திருமணம்… ஆனால் இருவருக்கும் மனதில்
ஒரு வேதனையை விதைத்திருந்தனர் குடும்பத்தார்.
என்ன செய்வது என்று புரியவில்லை… எதாவது செய்யத் தான் வேண்டும்…அது என்ன… என்ற கேள்வியோடு நாளைய விடியலுக்காகக் காத்திருந்தான் அதியமான்…
தொடரும்…